விரைவில் ஆன்லைனில் பி.எப்., பணம் பெறும் வசதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2016

விரைவில் ஆன்லைனில் பி.எப்., பணம் பெறும் வசதி

தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும்பி.எப்., பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறும் வசதியை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எ.ப்.ஓ.,), ஆரக்கிள் ஓ.எஸ்., மூலம் ஒருங்கிணைந்த டேட்டா சென்டர்களை செகந்திராபாத், கர்கூன், துவாரகா ஆகிய இடங்களில் அமைக்கவுள்ளது.


இந்த டேட்டா சென்டர்களுடன் நாடு முழுவதிலுமுள்ள 123 இ.பி.எப்.ஓ., அலுவலகங்களும் இணைக்கப்படும். இப்பணி ஜூன் மாதத்தில் நிறைவாகும். இதனையடுத்து ஆகஸ்டு மாதம் முதல், பி.எப்., பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறும் புதிய வசதியை மத்தியஅரசு அறிமுகப்படுத்த உள்ளது.இப்புதிய வசதியில், சந்தாதாரர்களின் பி.எப். கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு எண், ஆதார் எண், பான் கார்டு எண் மற்றும் யூ.ஏ.என். நம்பரை குறிப்பிட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின் பி.எப்., பணம் நேரடியாக வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யப்படும். இப்புதிய வசதியால் சந்தாதாரர்கள் சில மணிநேரங்களிலேயே பி.எப்., பணத்தை திரும்ப பெற முடியும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி