பணி நிரந்தரம் செய்ய பகுதி நேர ஆசிரியர்கள் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2016

பணி நிரந்தரம் செய்ய பகுதி நேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தமிழகப் பகுதி நேரச் சிறப்பாசிரியர்கள் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தஞ்சாவூரில் இந்தச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


இதில் தமிழகத்தில் பணியாற்றி வரும் 16,543 பகுதி நேர ஆசிரியர்களைத் தமிழக அரசுப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

 பகுதி நேர ஆசிரியர்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பள்ளி விடுமுறை மாதமான மே மாத ஊதியத்தைப் பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து விடுமுறைகளையும் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநிலப் பொதுச் செயலர் ஜயச்சந்திர பூபதி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஜான்சன், துணைத் தலைவர் மணி, மாநில குழு உறுப்பினர் வெங்கட்ரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி