ஜாக்டோ பேச்சுவார்த்தை முழு விவரம்-தமிழ்நாடுஆசிரியர் கூட்டணிபொதுசெயலர் செ.முத்துசாமி அவர்களின் அறிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2016

ஜாக்டோ பேச்சுவார்த்தை முழு விவரம்-தமிழ்நாடுஆசிரியர் கூட்டணிபொதுசெயலர் செ.முத்துசாமி அவர்களின் அறிக்கை

ஜாக்டோ தரப்பில் 15 அம்சக்கோரிக்கைகளை, ஒவ்வொரு கோரிக்கையாக ஒவ்வொரு சங்கபிரதிநிதிகள் தெளிவாக எடுத்துக்கூறினர்.

அப்போது கல்வித்துறை செயலர் அவற்றை கவனமாக குறிப்பெடுத்துக்கொண்டார்.

அதேசமயம் முக்கிய கோரிக்கைகளை நிதியமைச்சர் அவர்களும் தனது குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக்கொண்டார்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலராகிய நான் கோரிக்கையை விளக்கி பேசும் போது தலைமைச்செயலர் ஏன் இப்பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பி.. ஏன் எனில் அவர் ஏற்கனவே கல்வித்துறை, மற்றும் நிதித்துறை செயலராக இருந்தவர் என்றும் தற்போது அரசின் முதன்மை செயலராக இருப்பதால் பங்கெடுக்காதது குறித்து கவலையாக உள்ளதாகவும் கூறினேன் .

           அதற்கு அரசு தரப்பில் அவர் முக்கிய வேலையாக சென்றிருப்பதால் கலந்துகொள்ள இயலவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் பெருமக்கள் அனைத்து கோரிக்கைகளையும் கவனமாக சுமார் 2 மணி நேரம் கேட்டனர்.

ஜாக்டோ சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு முடிவு என்ன என்று கேட்ட போது.

நிதியமைச்சர் கல்வி அமைச்சரை பதில் கூறுமாறு அழைத்தார்.

அதற்கு கல்வி அமைச்சர் நிதியமைச்சரே இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றுள்ளதால் அவரையே பதிலளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

நிதியமைச்சர் அவர்கள் தனது பதிலில் தற்போது சட்டமன்றம் கூட உள்ளது.
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 16-ந்தேதி பட்ஜெட் அறிக்கையில் நல்ல தகவல் வரும் என நம்பிக்கை வைக்க கேட்டுக்கொண்டார்.

பிறகு கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கூட்டம் சுமுகமாக முடிந்தது.

               அரசின் பேச்சு வார்த்தைக்குப்பின்பு  ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூடி கலந்தாலோசனை செய்தனர்.

இறுதியில் நிதியமைச்சர் அவர்கள் அளித்த நம்பிக்கையின் அடிப்படையில்  வரும் தமிழக அரசின் சட்டமன்ற பட்ஜெட்  கூட்டத்தொடரில் 16-ந்தேதி பட்ஜெட் அறிவிப்பில் கோரிக்கைகள் ஏற்பு குறித்து அறிவிப்புகளை எதிர்பார்ப்பதாகவும்,

அவ்வாறு அறிவிப்புகள் இல்லை எனில்  ஜாக்டோ உயர்மட்டக்குழுக்கூட்டம் வரும் 17-ந்தேதி கூடி அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்யும்  எனவும் ஜாக்டோ உயர்மட்டக்குழுவினர் ஒருமனதாக முடிவாற்றி பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் தகவல் தெரிவித்தனர் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

2 comments:

  1. I have a doubt Can this government really make policy decisions in this budget? Since this is an election year the budget is supposed to be an interim budget. My point is there is little hope from govt. But they fear elections.

    ReplyDelete
  2. I have a doubt Can this government really make policy decisions in this budget? Since this is an election year the budget is supposed to be an interim budget. My point is there is little hope from govt. But they fear elections.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி