SSTA  ஓரே கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு!!!   - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2016

SSTA  ஓரே கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு!!!  

                  இடைநிலை ஆசியர்கள் ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும் என்று பல்வேறு சட்டப்போராட்டத்தினையும்,களப்போராட்டத்தினையும் 5 ஆண்டுகளாக நமது இயக்கம் தொடர்ந்து நடத்தி  வருகிறது... கடுமையான போராட்டம் மட்டுமே வெற்றிவாய்ப்பை பெற்றுத்தரும் என்ற  சூழலில் மிக கடுமையான  போராட்டத்தில் SSTA களம் இறங்குகிறது....


இதுவரை மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி பல்வேறு அமைப்புகள் பல போராட்டங்கள் நடத்தி வருகின்றன
,ஆனால் 2009 க்கு பின் நியமனம் பெற்ற 22,000 ஆசிரியர்களுக்கு மாநில அரசுக்கு இணையான ஊதியம் கூட இதுவரை வழங்கவில்லை,இதை எதிர்த்து சில ஆண்டுகளாக சட்டப்போராட்டம் SSTA தொடர்ந்து நடத்திவருகிறது.தற்போது 2009 க்கு பின் நியமனம் பெற்ற அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் மாநில அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்  (1.86 ஓரே கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி) வழங்க கோரி                 வரும்- பிப்ரவரி- 18 ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் SSTA மேற்கொள்ளவிருக்கிறது... தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் இதுவரை எதிர்பார்த்த உண்மையான போராட்டம் இது தான்...                           'செய் அல்லது செத்து மடி'  என்ற வார்த்தைக்கு ஏற்ப இந்த" உயிர் துறக்கும் போராட்டம் நடைபெற உள்ளது இப்போராட்டம் வெற்றி பெற "அனைத்து ஆசிரியர்களும் தங்களின் மேலான ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்க SSTA அன்புடன் வேண்டுகிறது....                          "இடைநிலை ஆசிரியர் ஊதியம்          SSTA வின்                                           முதலான கோரிக்கையும்" இதுவே... முழுமையான கோரிக்கையும் இதுவே..      " உணர்வுக்கு குரல் கொடுப்போம்" "உரிமைக்கு உயிர்கொடுப்போம்" ஒன்றுபடுவோம் பேராடுவோம் !!! போராடுவோம் வெற்றி பெறுவோம் !!! வெற்றி ஒன்றே எங்கள் உயிர் மூச்சு !!!      விரைவில் போராட்ட களத்தில் உயிருக்கு அஞ்சாத  உண்மை போராளிகளுடன்....

1 comment:

  1. மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று...ஆசிரிய சமுதாயத்தில் தற்போது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது 2009 க்குப்பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களே....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி