Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

May 31, 2016

அரசு பள்ளிகள் நாளை திறப்பு

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நாளை திட்டமிட்டபடி திறக்கப்படுகின்றன.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து, ஏப்., 22ம் தேதி, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு தொடக்க பள்ளிகளுக்கு, மே 1 முதல் விடுமுறை விடப்பட்டது.

விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.கோடை வெயில் வறுத்தெடுத்ததால், பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என, கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர் அமைப்பினர் வலியுறுத்தினர். இதனால், பள்ளி திறப்பு தள்ளிப்போகும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பள்ளிக்கல்வி துறை மறுத்து விட்டது.இதனால், திட்டமிட்டபடி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள்,நாளை திறக்கப்படுகின்றன. அன்றைய தினமே, இலவச பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பல மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஜூன் 6; சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ஜூன் 8ம் தேதியும் திறக்கப்பட உள்ளன.

தள்ளிவைக்க கோரிக்கை:

இதற்கிடையில், தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில், முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சங்க பொதுச் செயலர் சேகர் தலைமையில், நிர்வாகிகள் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:தமிழகத்தில், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மாணவர்கள், ஜூன் 1ல் பள்ளிக்கு வருவது சிரமமாக இருக்கும். எனவே, ஜூன், 10ம் தேதி வரை, பள்ளி திறப்பை தள்ளிவைக்க வேண்டும்.அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும், நேரடியாக, ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, பாடம் நடத்த நியமிக்கப்பட்ட, பட்டதாரி ஆசிரியர்கள், எம்.பில்., பட்டம் பெற்றிருந்தால், ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அதை வழங்க, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

20 comments :

  1. TET2013 90+அடுத்தகட்ட கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் date ?????????

    ReplyDelete
  2. TET2013 90+அடுத்தகட்ட கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் date ?????????

    ReplyDelete
  3. TET2013 90+அடுத்தகட்ட கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் date ?????????

    ReplyDelete
  4. School Lab la aazhl illa .... apuram yethukku school open panringa .....

    ReplyDelete
  5. School Lab la aazhl illa .... apuram yethukku school open panringa .....

    ReplyDelete
  6. Lab asst result poduveengala illa maateengala apram edukuda exam vaikareenga last year exam eludi innayoda 1 year agapogudhu. Enga vaitherichal ungala summa vidathu

    ReplyDelete
  7. Please announce the lab assistant result

    ReplyDelete
  8. Oru commenta oru time poda maattingala..neenga ellam mendala?

    ReplyDelete
  9. Oru commenta oru time poda maattingala..neenga ellam mendala?

    ReplyDelete
  10. Neenga ethana time potrukinga parunga sir

    ReplyDelete
  11. ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பட்டியல் நிலை என்ன?

    ReplyDelete
  12. tet 90+ portam date ? case nat govt sappot pls poratalam 90+ jop confam

    ReplyDelete
  13. ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பட்டியல் நிலை என்ன?

    ReplyDelete
  14. வாங்கப்பா போராட்டம் பன்னலனாலும் புது கல்வி அமைச்சரிடம் ஒரு மனு வாவது கொடுத்துட்டு வருவோம்...

    ReplyDelete
  15. காத்திருங்கல் நண்பர்களே நல்வழி பிறக்கும்

    ReplyDelete
  16. காத்திருங்கல் நண்பர்களே நல்வழி பிறக்கும்

    ReplyDelete
  17. காத்திருங்கல் நண்பர்களே நல்வழி பிறக்கும்

    ReplyDelete
  18. இன்னுமா காத்திருக்கனும் ஏற்கனவே Pass பன்னவங்களுக்கு வேலை போடனாலும் புதுசா Test ஆவது வைங்க என்ற மனநிலைக்கு வந்தே பல மாதங்கள் ஆகிவிட்டது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி