Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

May 30, 2016

‘எதிர்காலத்தை திட்டமிட்டே, படிப்பை தேர்வு செய்ய வேண்டும்.

“எதிர்காலத்தை திட்டமிட்டு, படிப்பை தேர்வு செய்ய வேண்டும்,” என, திருப்பூரில், ‘தினமலர்’ சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி அறிவுறுத்தினார்.‘தினமலர்’ நாளிதழ், ‘சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’ சார்பில், இன்ஜினியரிங் படிப்புகள், அண்ணா பல்கலை ‘கவுன்சிலிங்’ நடைமுறை குறித்த, ‘உங்களால் முடியும்’ என்ற ஆலோசனை நிகழ்ச்சி, திருப்பூர் காயத்ரி மஹாலில் நேற்று நடந்தது.
கோவை ‘ஸ்ரீஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லூரி’ சேர்மன் ராஜாராம் முன்னிலை வகித்தார்.

ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது:

மாணவ, மாணவியர் இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவே, ‘கவுன்சிலிங்’ பகுதிக்கு செல்ல வேண்டும். ‘ஒரிஜினல்’ சான்றிதழ்களை, எடுத்துச் செல்வது முக்கியம். சான்றொப்பமிட்ட, நகல் சான்றிதழ்களும் கைவசம் வைத்திருக்க வேண்டும். கல்லூரி பெயர், குறியீடு எண் தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஆறு கல்லூரிகளை தேர்வு செய்திருப்பது அவசியம். எதில் வாய்ப்பு உள்ளதோ, அதை தேர்வு செய்யலாம். ‘வெரிபிகேஷன்’ அறைக்கு, மாணவர்கள் மட்டுமே செல்ல முடியும்; அங்கே, ‘ஒரிஜினல்’ சான்றிதழ்களை கொடுக்க வேண்டும். அங்குள்ள ஊழியர்கள், அலுவலர்களிடம் ஆலோசனை கேட்கக்கூடாது; சுயமான, நிதானமான முடிவே முக்கியம்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், ‘மெரைன் இன்ஜினியரிங்’ படிப்பில் சேரும் மாணவர்கள், மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தனியார் கல்லூரிகளில் சேர, மருத்துவ சான்று தேவையில்லை. ‘கவுன்சிலிங்’ செல்வதற்கு முன், சேர விரும்பும் கல்லூரிகளில் கல்வி கட்டணம் என்னென்ன முறையில், எவ் வளவு பெறப்படுகிறது, என்பதை முன்பே தெரிந்திருப்பது முக்கியம். வங்கி கடனுதவி பெற விரும்பும் மாணவர்கள், அதற்கான முயற்சியை, இப்போதே துவக்க வேண்டும்.

சான்றிதழ்களை, ‘லேமினேஷன்’ செய்திருக்கக் கூடாது; அவை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு உள்ளிட்ட ‘கோட்டா’ அடிப்படையில், வழங்கப்படும் ‘சீட்’ குறித்து, தெளிவாக தெரிந்திருப்பது முக்கியம். வங்கி சலான் பெறும்போது, பெயர், ஜாதி, ‘பார்கோடு’ எண் ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.‘கவுன்சிலிங்’ கடிதம் கிடைக்காதவர்கள், அங்குள்ள தகவல் மையத்தில், பெறலாம்.கல்லூரியில், ‘ஒரிஜினல்’ சான்றிதழ் இருக்கும் பட்சத்தில், கல்லூரி முதல்வரின் சான்றொப்பமிட்ட நகல் சான்றிதழ்களுடன், அவரது ஒப்பமிட்ட கடிதத்தை இணைத்து, ‘கவுன்சிலிங்’கில் தந்தால், ஏற்கப்படும். பாடப்பிரிவை தேர்வு செய்யும்போது, மிக கவனமாக இருக்க வேண்டும்; கல்லூரி பெயர், குறியீடு எண் மாறினால், சம்பந்தமில்லாத பாடப்பிரிவை பெற நேரிடும்.இன்ஜினியரிங் படிப்புக்கு மிக பெரிய எதிர்காலம் உள்ளது.ஊருக்கு முக்கியத்துவம் தராமல், கல்லூரிக்கு முக்கியத்துவம் தர வேண்டும். எதிர்காலத்தை திட்டமிட்டு,படிப்பை தேர்வு செய்ய வேண்டும். ‘சிலபஸ்’ தாண்டி கற்றுத்தரும் கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., படிப்புக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆர்வமுள்ள படிப்பை தேர்வு செய்யாமல், எதிர்கால தொழில்நுட்ப தேவைக்கேற்ற படிப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும். மருத்துவ படிப்பை தேர்வு செய்தால், மேல்படிப்பு மிக முக்கியம். இவ்வாறு, ஜெயப்பிரகாஷ் காந்தி பேசினார்.அதன்பின், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு ‘கவுன்சிலிங்’ கையேடு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை, கோவை ஸ்ரீஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லூரி, கோவை ஸ்ரீகுரு தொழில்நுட்ப கல்லூரி இணைந்து வழங்கின.

‘திறமையை வளர்க்கணும்

’‘சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’ தலைவர் ஸ்ரீராம் பேசுகையில், “பிளஸ் 2 பொதுத்தேர்வில் மதிப்பெண் பெற்றால் மட்டும் போதாது; இன்ஜினியரிங் துறையில் படிக்க,மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்வது அவ சியம். அனைத்து நிறுவனங்களிலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுதுறை உள்ளது. எந்த தொழில் துறையில் சாதிக்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதன்படி, உயர்கல்வியையும், சிறந்த கல்வி நிறுவனத்தையும் தேர்வு செய்து படிக்க வேண்டும். இதன் மூலம், சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி, வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்,” என்றார்.

பாராட்டத்தக்கது!

‘ஸ்ரீகுரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’ தலைவர் பன்னீர்செல்வம் பேசுகையில், “இன்றைய காலச்சூழலும், வாழ்க்கையும் வேகமாக இயங்குகின்றன. உயர் கல்வி குறித்துபெற்றோருக்கும், மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்குவது மிக அவசியம். ‘தினமலர்’ நாளிதழ், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள, ஜெயித்துக்காட்டுவோம்’ நிகழ்ச்சி; சிறந்த கல்லூரி, உயர்கல்வியை தேர்வு செய்யும் வகையில், ‘உங்களால் முடியும்’ நிகழ்ச்சி என, மாணவ சமுதாயத்துக்கு வழிகாட்டுவது பாராட்டத்தக்கது,” என்றார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி