Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 3, 2016

1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நிகழ் கல்வியாண்டில் 2 கோடி பாடப் புத்தகங்கள் விநியோகம்.

நிகழ் கல்வியாண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்காக 1,97,65,850 பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிட்டு வழங்கி வருகிறது.

அதன்படிநிகழ் கல்வியாண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்காகஒரு கோடியே 97 லட்சத்து 65,850 புத்தகங்களும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக 57 லட்சத்து 84,500 புத்தகங்களும், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்காக 83 லட்சத்து 16,000 புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.தனியார் பள்ளிகளுக்கு, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை 74.6 லட்சம் புத்தகங்களும், பத்தாம் வகுப்புக்கு 17.2 லட்சம் புத்தகங்களும், பிளஸ் 2வகுப்புக்கு 22.8 லட்சம் புத்தகங்களும் விற்பனையில் உள்ளன. சி.பி.எஸ்.இ மாணவர்களுக்காக 7லட்சத்து 47,000 புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் தமிழ்நாடு அரசு கேபிள் தொலைகாட்சியின்மூலம் அனைத்து தாலுகா தலைமையிடங்களில் செயல்படும் 285 அரசு பொது இ-சேவை மையங்களின் மூலம் பாடநூல்கள் தேவைப்படும் மாணவர்கள் புத்தகங்களின் இருப்பை அறிந்துகொண்டு, வேண்டிய புத்தகங்களை பதிவு செய்து அதற்கான தொகையை செலுத்தி தங்களின் முகவரிக்கு கூரியர் சர்வீஸ் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இந்த தகவல், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்னும் 10 நாள்களில்: பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தற்போது அச்சிடப்பட்டு வருவதால், இன்னும் 10 நாள்களில் அந்த வகுப்புக்கான பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என கல்வித்துறைவட்டாரங்கள் தெரிவித்தன.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி