Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 11, 2016

10-ம் வகுப்பு, பிளஸ் 2 அரசு தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள் மாவட்ட வாரியாகக் கணக்கெடுப்பு: ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டம்.

பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 அரசு தேர்வுகளில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள்குறித்து மாவட்ட வாரியாக பள்ளிக் கல்வித் துறை கணக்கெடுத்து வருகிறது.தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 10,11,919 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 9,47,335 பேர் தேர்ச்சி பெற்றனர்.பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வில் 8,33,682 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 7,61,725 பேர் தேர்ச்சி பெற்றனர்.தற்போது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளி வாரியாகவும், பாடம் வாரியாகவும் மாவட்ட கல்வித் துறை கணக்கெடுக்கத் தொடங்கியுள்ளது.

இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:பள்ளிக் கல்வி இயக்குநரின் உத்தரவுப்படி இந்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள், பாடங்கள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது. இந்த அறிக்கை பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

மேலும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கான காரணம் குறித்து குறிப்பிட்ட பள்ளித் தலைமை ஆசிரியர், பாட ஆசிரி யரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதைத் தொடர்ந்து, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், தேர்ச்சி சதவீதம் மிகக் குறைந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்களின் ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது உட் பட பல்வேறு கடுமையான நடவடிக் கைகளை எடுக்கவும் பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

27 comments :

  1. Replies
    1. மூன்றாண்டு கண்ணீருக்கு முடிவு கிடைக்குமா. . .?

      ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தமிழக அரசோ மௌனம் காக்கிறது. ஆசிரியர்கள் மனமோ வேதனையில் துடிக்கிறது.

      2013 ஆகஸ்டு மாதம் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதிவிட்டு வந்த பிறகு எங்கள் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. எங்கள் ஐயா அப்துல்கலாம் கூறியது போல நாங்களும் கனவு கண்டோம். அவரைப் போல விஞ்ஞானிகள் பலரை உருவாக்க கனவு கண்டோம். பல விவேகானந்தர், நேதாஜி, அம்பேத்கர்களை உருவாக்க கனவு கண்டோம். ஜனவரி 2014ல் கனவு பலிக்கும் விதமாக சான்றிதழ் சரிபார்ப்பையும் முடித்தோம். ஓரிரு வாரங்களில் பணிநியமன ஆணை வந்துவிடும், நம் கனவு பலித்துவிடும் என்று மனக்கோட்டைக் கட்டினோம்.

      எருக்கஞ்செடி மேல இடி வந்து விழுந்தது போல் வந்தது அரசின் அறிக்கை. மனக்கோட்டை தகர்ந்தது. கனவு கலைந்தது. ஆம். உயர்நீதிமன்றத்தில் மதிப்பெண் தளர்வு கேட்ட போது மாணவர்களின் கல்வித் தரத்தில் சமரசம் செய்து கொள்ளமாட்டோம் என்று கூறிய அதே அரசு கொண்டு வந்தது மதிப்பெண் தளர்வு. அதை ஏற்கிறோம். ஆனால் முன்தேதியிட்டு வழங்கியதை ஏற்க இயலாது.

      போட்டியில் கலந்து கொண்டு வென்ற மாணவனை பரிசு வாங்கும் போது, பொறு, உன்னோடு ஓடி வந்தவர்கள் பின்னடைந்துவிட்டார்கள் அவர்களும் வரட்டும், பிறகு பரிசை அறிவிக்கலாம் என்றால் அம்மாணவனின் மனநிலை?

      தமிழக அரசின் தகுதிகாண் முறையால் (WEITAGE) முன்னே வந்தவன் பின்னே தள்ளப்பட்டான் பின்னே வந்தவன் முன்னே சென்றுவிட்டான். உலகில் இப்படியொரு வழக்கம் எங்காவது உண்டா. . .?

      கடந்த மூன்று ஆண்டுகளில நாங்கள் சீந்திய கண்ணீர்த்துளிகளை சேகரித்திருந்தால், சென்னையில் வந்த வெள்ளம் குறைவுதான் என்றிருப்பீர்கள். திருமண வாழ்வின் விளிம்பில் இருக்கும் ஆசிரியர் ஆசிரியைகளின் வேதனை சொல்ல இயலாது. திருமணமான ஆசிரியர் ஆசிரியயைகள் குடும்பம் நடத்த படும் இன்னல் தாங்க இயலாது. ஆசிரியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் துன்பங்கள் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.

      நல்லது. நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். இனியாவது எங்களுக்கு ஒரு தீர்வு வேண்டாமா...? அரசின் மவுனம் கலையுமா. . .?


      மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்த்தலைவி அம்மா அவர்களே, மாண்புமிகு ஆசிரியர் தேர்வாணையச் செயலர் உயர்திரு.சபீதா அவர்களே, மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் உயர்திரு. பெஞ்சமின் அவர்களே, மற்ற துறைகளைச் சேர்ந்த மாண்புமிகு அமைச்சர்களே, அனைத்து தொகுதியைச் சேர்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களே,

      எங்கள் பிரச்சனையைத் தீர்க்க உறுதியளியுங்கள். எங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுங்கள். எங்களுக்குரிய பணியை வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காத்திடுமாறு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.


      எழுத்து ஆயுதம் என்றால், நானும் தீவிரவாதியே!
      அருப்புக்கோட்டை மு.இராஜபாண்டி.

      Delete
    2. சூசூசூசூப்பர்

      Delete
  2. tet 2013 90+....friends அடுத்த கட்ட நடவடிக்கை?????

    ReplyDelete
  3. TET தகுதிச்சான்றிதழ் பார்க்கும் போதெல்லாம், முன் தேதியிட்ட இறப்புச்

    சான்றிதழாய் அச்சுறுத்துகிறது.tet 2013 90+....friends அடுத்த கட்ட நடவடிக்கை?????

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Lab result poduveengala illa maateengala enna tan problem ungaluku?

    ReplyDelete
  6. TET 2013 LA PASS ANAVALUKU ENNA THAN SOLDRNGA FRDS

    ReplyDelete
  7. NAMAKU 2013(90+) MUDIVA ILLAIYA

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. 90+ ku viraivil nalla kalam varuthu don't worry

      Delete
    4. 90+ ku viraivil nalla kalam varuthu don't worry

      Delete
  8. Mutual Transfer=BT ENGLISH ,,, MELMARUVATHUR, KANCHEEPURAM DT. ................ . . to SALEM, NAMAKKAL, DHARMAPURI, ERODE.dt..pls contact=8012998093,7667724789......

    ReplyDelete
  9. மூன்றாண்டு கண்ணீருக்கு முடிவு கிடைக்குமா. . .?

    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தமிழக அரசோ மௌனம் காக்கிறது. ஆசிரியர்கள் மனமோ வேதனையில் துடிக்கிறது.

    2013 ஆகஸ்டு மாதம் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதிவிட்டு வந்த பிறகு எங்கள் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. எங்கள் ஐயா அப்துல்கலாம் கூறியது போல நாங்களும் கனவு கண்டோம். அவரைப் போல விஞ்ஞானிகள் பலரை உருவாக்க கனவு கண்டோம். பல விவேகானந்தர், நேதாஜி, அம்பேத்கர்களை உருவாக்க கனவு கண்டோம். ஜனவரி 2014ல் கனவு பலிக்கும் விதமாக சான்றிதழ் சரிபார்ப்பையும் முடித்தோம். ஓரிரு வாரங்களில் பணிநியமன ஆணை வந்துவிடும், நம் கனவு பலித்துவிடும் என்று மனக்கோட்டைக் கட்டினோம்.

    எருக்கஞ்செடி மேல இடி வந்து விழுந்தது போல் வந்தது அரசின் அறிக்கை. மனக்கோட்டை தகர்ந்தது. கனவு கலைந்தது. ஆம். உயர்நீதிமன்றத்தில் மதிப்பெண் தளர்வு கேட்ட போது மாணவர்களின் கல்வித் தரத்தில் சமரசம் செய்து கொள்ளமாட்டோம் என்று கூறிய அதே அரசு கொண்டு வந்தது மதிப்பெண் தளர்வு. அதை ஏற்கிறோம். ஆனால் முன்தேதியிட்டு வழங்கியதை ஏற்க இயலாது.

    போட்டியில் கலந்து கொண்டு வென்ற மாணவனை பரிசு வாங்கும் போது, பொறு, உன்னோடு ஓடி வந்தவர்கள் பின்னடைந்துவிட்டார்கள் அவர்களும் வரட்டும், பிறகு பரிசை அறிவிக்கலாம் என்றால் அம்மாணவனின் மனநிலை?

    தமிழக அரசின் தகுதிகாண் முறையால் (WEITAGE) முன்னே வந்தவன் பின்னே தள்ளப்பட்டான் பின்னே வந்தவன் முன்னே சென்றுவிட்டான். உலகில் இப்படியொரு வழக்கம் எங்காவது உண்டா. . .?

    கடந்த மூன்று ஆண்டுகளில நாங்கள் சீந்திய கண்ணீர்த்துளிகளை சேகரித்திருந்தால், சென்னையில் வந்த வெள்ளம் குறைவுதான் என்றிருப்பீர்கள். திருமண வாழ்வின் விளிம்பில் இருக்கும் ஆசிரியர் ஆசிரியைகளின் வேதனை சொல்ல இயலாது. திருமணமான ஆசிரியர் ஆசிரியயைகள் குடும்பம் நடத்த படும் இன்னல் தாங்க இயலாது. ஆசிரியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் துன்பங்கள் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.

    நல்லது. நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். இனியாவது எங்களுக்கு ஒரு தீர்வு வேண்டாமா...? அரசின் மவுனம் கலையுமா. . .?


    மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்த்தலைவி அம்மா அவர்களே, மாண்புமிகு ஆசிரியர் தேர்வாணையச் செயலர் உயர்திரு.சபீதா அவர்களே, மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் உயர்திரு. பெஞ்சமின் அவர்களே, மற்ற துறைகளைச் சேர்ந்த மாண்புமிகு அமைச்சர்களே, அனைத்து தொகுதியைச் சேர்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களே,

    எங்கள் பிரச்சனையைத் தீர்க்க உறுதியளியுங்கள். எங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுங்கள். எங்களுக்குரிய பணியை வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காத்திடுமாறு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.


    எழுத்து ஆயுதம் என்றால், நானும் தீவிரவாதியே!
    அருப்புக்கோட்டை மு.இராஜபாண்டி.

    ReplyDelete
  10. நம்ம வேதனை அழகா சொன்னீங்கா சார்

    ReplyDelete
  11. MUTUAL TRANSFER BT SCIENCE VILLUPURAM TO CHENNEI,THIRUVALLUR,KANCHEEPURAM.CONTACT NO:8428895158,8015333658.

    ReplyDelete
  12. நம்ம வேதனையை அழகா சொன்னீங்கா சார்... நன்றி !!!!!

    ReplyDelete
  13. india historla first time highest mark eduthu failna history tn history 6,00,000 cantidate attan pana 2013 tet exam finala highest mark edutha posting enpadu india,yal irukum nadamuri enpathi
    poratam mulam tn govt puriya vaipom

    ReplyDelete
  14. Nanbargal anaivarukkum oru anbana vendukol 90+, relaxationla pass panninavargal endru piriththu paarkkamal anaivarum ondru sernthu poradinal 2013 tet pass panninavargal anaivarukkum job uruthi..

    ReplyDelete
  15. MPC TRB coaching center ERODE
    Starts new batch for PG TRB (Mathematics only) from June 3rd week onwords
    Place: 5 KM from erode bus stand Thannerpandalpalayam
    Contact: 9842771667, 9042071667
    " Study material available"

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி