Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 11, 2016

10ம் வகுப்பு துணை தேர்வு:'தத்கல்' திட்டம் அறிவிப்பு.

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு, 'தத்கல்' திட்டத்தில், ஜூன், 13, 14ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஏப்ரலில் நடந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்து, எழுதாதவர்கள், தேர்வு எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள், சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள், சிறப்பு தத்கல் திட்டத்தில் ஜூன், 13, 14ம் தேதிகளில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரான, சி.இ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் போது, தற்காலிக மதிப்பெண் சான்றிதழையும், ஏற்கனவே தேர்வுக்கு வழங்கப்பட்ட, 'ஹால் டிக்கெட்'டையும், கல்வி அலுவலக அலுவலரிடம் காட்ட வேண்டும்.இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி