Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 3, 2016

10-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர அரசு நிதியுதவி

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர் தாங்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்க அரசு வழங்கும் நிதியுதவியைப் பெற விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி:

ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசுப் பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிகமதிப்பெண் பெறும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த 3 மாணவர்கள்,3 மாணவியர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த 2 மாணவர்கள், 2 மாணவியர் என மொத்தம் 10 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பில் சேர்ந்து மேல்நிலைக் கல்வி படிக்க அரசால் நிதியுதவி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் உதவி பெற விரும்பும் மாணவ, மாணவியரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.28,000 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.56,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

அதன்படி, தலா ஓராண்டுக்குக் கல்விக் கட்டணம் ரூ.8,000, பராமரிப்புக் கட்டணம் ரூ.3,650, விடுதிக் கட்டணம் ரூ.15,000 (விடுதியில் சேர்ந்து படிப்பவர்களுக்கு மட்டும்), சிறப்புப் பயிற்சிக் கட்டணம் ரூ.1,500 என மொத்தம் ரூ.28,150 அல்லது ரூ.28,000 வழங்கப்படும்.மாவட்டத்தில் தகுதியுடைய மாணவ, மாணவியர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி