Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 11, 2016

பி.இ., ௨ம் ஆண்டு நேரடி சேர்க்கை 16,௦௦௦ விண்ணப்பம் பதிவிறக்கம்.

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு கடைசி நாளான நேற்று வரை 16 ஆயிரத்து 89 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துள்ளனர்.டிப்ளமோ, பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்தல், கடந்த மே 24-ம் தேதி தொடங்கியது.

மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பத்தை பெற்று, தங்களது மதிப்பெண் மற்றும் சுய விபரங்களை பூர்த்தி செய்து, அந்தவிண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனுடன் சேர்க்கைக்கான கட்டணம் ரூ.300-க்கு டி.டி., எடுத்து கலந்தாய்வு நடக்கும், காரைக்குடியில் உள்ள அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லுாரிக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.கடைசி நாளான நேற்றுவரை 16,089 பேர் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துள்ளனர். சிவில் பிரிவுக்கு 3,672, மெக்கானிக்கல்6,435, எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் 5,695,கெமிக்கல் டெக்னாலஜி 149, டெக்ஸ்டைல் டெக்னாலஜி 86, லெதர் டெக்னாலஜி 8, பிரின்டிங் டெக்னாலஜி 13 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், பி.எஸ்.சி., முடித்த 16 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு தமிழகம் :

முழுவதும் உள்ள 533 இன்ஜி., கல்லுாரிகளிலிருந்து ஒரு லட்சத்து 11 ஆயிரம் இடங்கள் இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு ஒப்படைக்கப்பட்டன. 16 ஆயிரத்து 637 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்றனர். இந்த ஆண்டு 550-க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளதால் கலந்தாய்வு இடங்கள் கடந்த ஆண்டை விட அதிகரிக்கும். கடந்த ஆண்டு 19 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த ஆண்டு 15 ஆயிரம் என்ற அளவிலேயே இருக்கும்.ஆண்டுக்கு ஆண்டு, பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையில் சேரும் டிப்ளமோ மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி