Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 1, 2016

எம்.பி.பி.எஸ்.: இதுவரை 19,224 விண்ணப்பங்கள் விநியோகம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை கடந்த 6 நாள்களில் மொத்தம் 19,224 மாணவர்கள் பெற்றுள்ளனர்.எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமை (மே 26) தொடங்கியது.

சென்னை உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.முதல் நாளான வியாழக்கிழமை 6,123 பேரும், வெள்ளிக்கிழமை 6,051 பேரும், சனிக்கிழமை 1,381 பேரும், ஞாயிற்றுக்கிழமை 170 பேரும், திங்கள்கிழமை 3,365 பேரும், செவ்வாய்க்கிழமை 2,134 பேரும் என கடந்த 6 நாள்களில் மொத்தம் 19,224 பேர் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.

ஆன்லைன் மூலமும்...: இதுதவிர, சுகாதாரத் துறையின் இணையதளமான www.tnhealth.org மூலமும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

ஜூன் 6 கடைசி: விண்ணப்பத்தைப் பெற ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாளாகும்.பூர்த்தி செய்த விண்ணப்பம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்துக்கு வந்துசேர கடைசி நாள் ஜூன் 7-ஆம் தேதியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இதுவரை 350 பேர் சமர்ப்பித்துள்ளனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி