Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 10, 2016

பாட புத்தகம் இல்லை: பிளஸ் 1 மாணவர்கள் தவிப்பு.

ாள்09ஜூன்201620:33தமிழகத்தில், ஜூன், 1ம் தேதி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்திறக்கப்பட்டன. அன்றே, மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்கள், வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.ஆனால், பிளஸ் 1 வகுப்புக்கு மட்டும், பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை; தனியார் பள்ளிகளுக்கும் கிடைக்கவில்லை.

அதனால், கடைகளுக்கு சென்று புத்தகங்கள் வாங்கி வருமாறு, பிளஸ் 1 மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் உத்தரவிட்டுள்ளன. ஆனால், எந்த இடத்திலும்புத்தகம் கிடைக்கவில்லை.

கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, ஜூன், 15 முதல் புத்தகங்கள் வினியோகம் செய்ய, பள்ளிக்கல்வி செயலகம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர்.'அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் செயல்படும் அரசு கேபிள், 'டிவி' நிறுவன இ - சேவை மையங்களில், ஜூன், 15க்கு பின் புத்தகம், 'ஆர்டர்' செய்து வாங்கலாம். சென்னையில், டி.பி.ஐ., வளாகத்தில் பிளஸ் 1 புத்தகம் விற்க, இரண்டு சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்படும்' என, அதிகாரிகள் கூறினர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி