sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jun 21, 2016

பிளஸ் 2 மாணவர்கள் ஜூலை 4 வரை வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்யலாம்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே ஜூலை 4-ஆம் தேதி வரை அரசின் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்யலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்வதற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, அசல் சான்றிதழ் பெறும் மாணவர்கள், தங்களின் அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நாளன்று தவறாமல் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இணையம் மூலமும் பதியலாம்:மேலும், பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியைப் பதிவு செய்தோர், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் தெரியவில்லையென்றால், வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரும் 4-ஆம் தேதி வரை, வேலைவாய்ப்புப் பதிவுப் பணி அந்தந்தப் பள்ளிகளிலேயே நடைபெற உள்ளது.பதிவு பணி நடைபெறும் 15 நாள்களுக்கும், மதிப்பெண் சான்றிதழ் வழங்கத் தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்புத் தேதியாக அளிக்கப்பட உள்ளது. அதேபோல், ட்ற்ற்ல்ள்:ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் மூலமாகவும் பதிவுசெய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அசல் சான்றிதழ்: பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை முதல் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகள் அந்தச் சான்றிதழைக் கொண்டு வேலைவாய்ப்புப் பதிவை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி