Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 15, 2016

20, 21-ம் தேதிகளில் 10-ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன் 20, 21-ம் தேதிகளில் நடைபெறும் பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2016 மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதி, அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகள் ஜூன், ஜூலை மாதம் நடைபெறும் சிறப்புத் தேர்வின்போது மீண்டும் செய்முறைத்தேர்வில் பங்குபெறலாம்.

அதன்படி, அறிவியல் பாட பயிற்சி வகுப்புக்கு 80 சதவீதம் வருகைப் புரிந்து செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ளத் தவறிய பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் வரும் 20, 21-ம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு துணைத் தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ளளாம்.மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை, செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களை மாணவ-மாணவிகள் அணுகலாம் என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி