Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 3, 2016

அரசு, தனியார் ஐடிஐகளில் மாணவர் சேர்க்கை: ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்.

வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அரசு, தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் மகளிர்க்கென இயங்கிவரும்அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர்க்கு கணினி இயக்குபவர், திட்ட உதவியாளர், டிடிபி ஆபரேட்டர் ஆகிய இரு தொழில் பிரிவுகளில் ஓர் ஆண்டு காலம் பயிற்சியளிக்கப்படுகிறது.பயிற்சி காலத்தில் மாதம் ரூ.500 உதவித்தொகை, விலையில்லா மடிக் கணினி, மிதிவண்டி, புத்தகங்கள், சீருடை, காலணி, கட்டணமில்லா பேருந்து வசதி உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும். ஓர் ஆண்டு பயிற்சி நிறைவு செய்த பின்னர் மத்திய அரசால் தேர்வு நடத்தி தேசிய தொழில் சான்று வழங்கப்படும்.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொருத்துநர், மின்சாரப் பணியாளர், குழாய் பொருத்துநர் போன்ற தொழில் பிரிவுகளிலும், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கம்பியாள் தொழில் பிரிவிலும் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.இவ் வாய்ப்பை பயன்படுத்தி தொழில் பயிற்சி பெற விரும்புபவர்கள் இணைதளம் மூலமாக வரும் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04286 267976 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி