sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jun 18, 2016

2,300 பேருக்கு மதிப்பெண் அதிகரிப்பு விடைத்தாள் மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை.

பிளஸ்-2 தேர்வில் மறு கூட்டல், மறுமதிப்பீடு செய்ததில் 2,300 பேருக்கு மதிப்பெண் கூடுதலாக வந்துள்ளது. எனவே முதலில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.பிளஸ்-2 தேர்வுகடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந் தேதிவரை பிளஸ்-2 தேர்வு நடைபெற்று, முடிவுகள் வெளியிடப்பட்டது.

தேர்வில் அதிக மதிப்பெண் வரும் என்று எதிர்பார்த்தவர்கள் முடிவில் எதிர்பார்த்த மதிப்பெண் இல்லாதாதால் ஏமாற்றம் அடைந்தனர். அவர்களில் 3,378 பேர் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். மறு கூட்டலுக்கு 2 ஆயிரத்து 707 பேர் விண்ணப்பித்தனர்.

ஆசிரியர்களின் குளறுபடி

மறுமதிப்பீட்டில் 2,200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் மாற்றம் இருந்தது. ஏராளமான மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் கூடுதலாக வந்துள்ளது. 5 முதல் 10 மதிப்பெண் அதிகமாக வந்துள்ளது. சில பக்கங்கள் மதிப்பீடு செய்யாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டலில் 56 பேருக்கு மதிப்பெண் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒரு மாணவருக்கு 187 மதிப்பெண்ணுக்கு பதிலாக 87 மதிப்பெண் என்று போடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மதிப்பீடு செய்ததில் பல குளறுபடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 2 ஆயிரத்து 300 பேருக்கு மதிப்பெண் அதிகரித்துள்ளது.

ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.குறிப்பாக அவர்கள் மீது 17 பி குற்றம் சுமத்தப்படவேண்டும் என்றுபள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்திற்கு, அரசு தேர்வுத்துறை சிபாரிசு செய்துள்ளது. சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது விசாரணை நடைபெறும் என்றும் தெரிகிறது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி