sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jun 18, 2016

2 ஆண்டுகளாக ஊதிய உயர்வின்றி பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள்

கடந்த 2 ஆண்டுகளாக ஊதிய உயர்வின்றிப் பணியாற்றி வருவதாக, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தெரிவித்தனர்.கடந்த 2000-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையின்படி, மாணவ-மாணவிகளுக்கு உடல்திறன், கலைத்திறன், தனித்திறன், தொழிற்திறன் ஆகியவற்றை வளர்க்க வேண்டும் என்பதற்காக சிறப்பாசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

இதைச் செயல்படுத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ) திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், தமிழகத்தில் பல ஆண்டுகள் இந்தப் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை.

ஊதிய உயர்வு இல்லை:

இந்த நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என முதல்வர்ஜெயலலிதா அப்போது அறிவித்தார். அதைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் ஓவியம், உடற்கல்வி,தையல், இசை, கணினி, கட்டடக்கலை, தோட்டக்கலை, வாழ்வியல் திறன் ஆகியப் பாடங்களுக்கு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கும் வகையில் 16 ஆயிரத்து 549 புதியப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.அதன்படி 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பகுதி நேர பணியில் சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ.5000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது.இவர்களுக்கு ஆண்டுதோறும் ஊதியத்தில் 10 சதவீதம் ஊதியஉயர்வு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், 2014-ஆம் ஆண்டு வரை மட்டும் ரூ. 2,000 உயர்த்தப்பட்டு ரூ.7,000 தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டது. அதன்பிறகு எந்த வித ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் கு.சேசுராஜா கூறியது:

வறுமையில் ஆசிரியர்கள்:பகுதி நேர சிறப்பாசிரியர்கள், தற்போது உரிய ஊதியமின்றி மிகவும் வறுமையில் உள்ளனர். இவர்களில் 500-க்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் ஆகாமலேயே பணி ஓய்வு பெற்றுள்ளார்கள். 62 ஆசிரியர்கள் மரணம் அடைந்து உள்ளனர். ஆனால், அவர்களின் குடும்பத்துக்கு எந்தவித நிதியுதவியும் கிடைக்கவில்லை.பகுதிநேர ஆசிரியைகளுக்கு கர்ப்பக்கால விடுப்பு எடுத்தால் ஊதியமும் கிடையாது. வேலைக்குப் போனால் மட்டுமே சம்பளம் என்ற நிலையில் இருப்பதால், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.எனவே பகுதி நேர சிறப்பாசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அத்துடன் எங்களுக்கான ஊதிய உயர்வை முறையாக வழங்க வேண்டும். எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் திங்கள்கிழமையன்று (ஜூன் 20), ஒரு லட்சம் கருணை மனுக்கள் அனுப்ப திட்டமிட்டு உள்ளோம். அதைத் தொடர்ந்து ஜூலை 9-ஆம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்க சென்னையில் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

5 comments :

 1. பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யவேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதா ?10 முதல் 25 ஆண்டுகள் காத்திருக்கும் ஆசிரியர்களை பற்றி சிந்தனை செய்யாமல் சுயநலத்தோடு செயல்படுவது சரியா மனசாட்சி இல்லயா ?

  ReplyDelete
 2. 25 year wait paniyatchna ipa unga age? , 25 year unkalal govt posting en poratam nataha ?

  ReplyDelete
 3. அன்பான பகுதி நேர ஆசிரிப்பெருமகளே,வாரத்தில் 3 நாங்கள் அரை நாட்கள் மட்டும் பணி புரிந்து ரூ 7000 உதியம் பெறும் நீங்கள் உங்களுடன் படித்து மெட்ரிக் ,தனியார் பள்ளிகளில் மாதம் ரூ 5000,உதியம் பெறும் அவர்களை பற்றி நினைத்து பார்த்தது உண்டா?அல்லது உங்களுக்கு வயதிலே மூத்தவர்களை நிலை பற்றி நினைக்காமல்,சுய நலத்தோடு நடக்கும் பகுதி நேர ஆசிரிப்பெருமகளே,நீங்கள் மட்டும்தான் உலகில் மிக மிக நல்லவர்கள் மிக்கநன்றி .

  ReplyDelete
 4. வேலை இல்லா அனைவருக்காகவும் ஒருநாள் நீங்கள் குரல் குடுத்தது உண்டா?
  இப்படிக்கு
  ச.சிதம்பரகுமாரசாமி,
  44/4,A R S,தெரு ,இடைக்கால,
  திருநெல்வேலி மாவட்டம் .
  அலைபேசி : 9486148902

  ReplyDelete
 5. Super chidambaram sir i m also from Papanasam tirunelveli music teacher

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி