Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 29, 2016

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வில் இந்த ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கு மீண்டும் மதிப்பு கூடியுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசனுக்கு அடுத்து 2-வது இடத்தைபிடித்தது.

 அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வில் இந்த ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கு மீண்டும் மதிப்பு கூடியுள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசனுக்கு அடுத்து 2-வது இடத்தைபிடித்தது.பொறியியல் கலந்தாய்வு தமிழ்நாடு முழுவதும் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு அரசு ஒதுக்கீட்டுக்கு 1 லட்சத்து 85 ஆயிரத்து 298 இடங்கள் வந்துள்ளன. இந்த இடங்களுக்கான பொது கலந்தாய்வு நேற்று முன்தினம் தொடங்கியது. பொதுப்பிரிவு கலந்தாய்வு நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. பல வருடங்களாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய பி.இ. படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவை (இ.சி.இ.) பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்து எடுத்தனர்.

அடுத்து கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-வது இடத்தை பிடித்தது. மீண்டும்கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆனால் கடந்த ஒன்றிரண்டு வருடங்களாக கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு பின்னுக்கு தள்ளப்பட்டு, மெக்கானிக்கல் பிரிவுக்கு மதிப்பு கூடியது. கடந்த வருட கலந்தாய்வின் இறுதியில் மெக்கானிக்கல் பிரிவு தான் முதல் இடத்திற்கு வந்தது. எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவு 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஆனால் இந்த வருடம் மீண்டும் கம்ப்யூட்டர்சயின்ஸ் பிரிவுக்கு மதிப்பு கூடியுள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆகியவற்றை பல மாணவ- மாணவிகள் அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் தேர்ந்து எடுத்து வருகிறார்கள். 2-வது இடம் பிடித்தது 2-வது நாளின் இறுதியில் மொத்தம் 3,990 பேர் பாடப்பிரிவுகளை தேர்வு செய்ததில் முதல் இடத்தை எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் (898 பேர்), 2-வது இடத்தை கம்ப்யூட்டர் சயின்ஸ் (667 பேர்), 3-வது இடத்தை மெக்கானிக்கல் (650 பேர்), 4-வது இடத்தை தகவல் தொழில்நுட்பம் (357 பேர்) ஆகியவை பெற்றன.

இதுபற்றி கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவ- மாணவிகளில் சிலர் கூறும்போது, “பி.இ. எந்த பிரிவை படித்தாலும் அவர்கள் சாப்ட்வேர் வேலைக்கு செல்லும் கம்பெனிகளில் கம்ப்யூட்டர் அல்லது தகவல் தொழில்நுட்ப பிரிவில் தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனால் தான் முதலிலேயே கம்ப்யூட்டர் பிரிவை படித்தால் நல்லது என்று நினைக்கிறோம். அதுவே இந்த வருடம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை அதிக மாணவர்கள் எடுப்பதற்கு காரணம்” என்றனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி