Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 12, 2016

எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான‘டான்செட்’ என்ற பொது நுழைவுத்தேர்வு தமிழகம் முழுவதும் 34 மையங்களில் நடந்தது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.இ. ஆகிய படிப்புகளில் சேருவதற்கு ‘டான்செட்’ என்ற பொது நுழைவுத்தேர்வு அவசியம். இதில் எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது.

இந்த தேர்வை சென்னை (அண்ணா பல்கலைக்கழகம்), திருச்சி, ஈரோடு, மதுரை, கோவை, நாகர்கோவில், திருநெல்வேலி உள்ளிட்ட 15 நகரங்களில் உள்ள 34 மையங்களில் மாணவ–மாணவிகள் எழுதினார்கள்.எம்.சி.ஏ. படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு நேற்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்காக மொத்தம் 6 ஆயிரத்து 324 மாணவ–மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இதேபோல், எம்.பி.ஏ. படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடந்தது. இந்த தேர்வுக்கு 16 ஆயிரத்து 559 மாணவ–மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மல்லிகா செய்து இருந்தார்.எம்.இ. படிப்பில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அந்த தேர்வுக்கு 17 ஆயிரத்து 47 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி