Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 13, 2016

ஐ.ஐ.டி., நுழைவு தேர்வில் 36 ஆயிரம் பேர் தேர்ச்சி.

தேசிய உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில், மொத்தம் உள்ள, 10 ஆயிரம் இடங்களுக்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வில், 36 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ராஜஸ்தான் மாணவர், தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.நாடு முழுவதும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில், தன்னாட்சி பெற்ற அமைப்பாக, 23 ஐ.ஐ.டி.,க்கள் செயல்படுகின்றன.

இவற்றில், ஆண்டுதோறும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, நாடு தழுவிய அளவில்ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வான, ஜே.இ.இ., தேர்வு நடத்தப்படுகிறது.ஜே.இ.இ., முதன்மை தேர்வை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஜே.இ.இ., 'அட்வான்ஸ்டு' தேர்வு ஐ.ஐ.டி.,யால் நேரடியாக நடத்தப்பட்டது.மே 22ல், நடந்த அட்வான்ஸ்டு தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று வெளியாயின. மொத்தம், 58 ஆயிரத்து, 964 பேர் பங்கேற்ற இந்த தேர்வில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் மாணவர் அமன் பன்சால் முதலிடம் பெற்றுள்ளார்.

தேசிய அளவில், 133வது இடம் பிடித்த, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த ரியா சிங், பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டில் முதல் முறையாக, வெளிநாட்டினரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். 18 பேர் தேர்வு எழுதியதில், இருவர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 23 ஐ.ஐ.டி.,க்களில்,10 ஆயிரத்து, 575 பி.இ., - பி.டெக்., இடங்களில் தரவரிசைப்படி, ஆன்லைன் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடக்கும்.

தமிழகத்தில் 650 பேர்:

ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வில், தேசிய அளவில், மொத்தம், ஏழு மண்டலங்கள் மூலம் மாணவர்கள் பதிவு செய்யப்பட்டனர். இதில், தமிழகத்தில் தேர்வு எழுதிய, 650 பேர் மற்றும் புதுச்சேரியில், 38 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி