Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 28, 2016

மவுசு! * இந்த ஆண்டு இ.சி.இ., - கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கு... * அண்ணா பல்கலையில் துவங்கியது இன்ஜி., பொது கவுன்சிலிங்

அண்ணா பல்கலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுகவுன்சிலிங், நேற்று துவங்கியது. இந்த ஆண்டில், இ.சி.இ., எனப்படும் எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கே மவுசு ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான மாணவர்கள், இப்பிரிவுகள் உள்ளிட்ட கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளையே தேர்வு செய்தனர்.அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட, 524 பொறியியல் கல்லுாரிகளில், 1.92 லட்சம் இடங்களுக்கு, ஒற்றைச் சாளர கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டு, 1.31 லட்சம் பேர், கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள நிலையில், இம்மாதம், 24ம் தேதி விளையாட்டு பிரிவுக்கும், 26ம் தேதி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடந்தது.பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், சென்னையில் நேற்று துவங்கியது. முதல் தர மாணவர்களுக்கான அரசு ஒதுக்கீட்டுஆணையை, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

கவுன்சிலிங்கில் பங்கேற்ற முதல் தர மாணவர்களில், முதலிடம் பெற்ற அபூர்வ தர்ஷினி, அண்ணா பல்கலையின் கிண்டி இன்ஜி., கல்லுாரியில், எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன் என்ற, இ.சி.இ., பிரிவை தேர்வு செய்தார்.அவரை அடுத்து வந்தவர்களில் நான்கு பேர், இ.சி.இ., பிரிவையே தேர்வு செய்தனர். ஒரு மாணவி உட்பட மூன்று பேர், மெக்கானிக்கல் பிரிவை தேர்ந்தெடுத்தனர்.கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் எல்க்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவை, தலா ஒருவரும் தேர்வு செய்தனர்.

முதல் நாளில் பங்கேற்றவர்களில், இ.சி.இ., கிடைக்காத மாணவர்கள், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை தேர்வு செய்தனர். 'ரேங்க்' பட்டியலில் முன்னணியில் இருந்த மாணவர்கள், பெரும்பாலும் கணினி சார்ந்த பிரிவுகளுக்கே முன்னுரிமை கொடுத்தனர்.அதேபோல, ரேங்க் பட்டியலில் உள்ள முதல், 10 மாணவர்களில் எட்டு பேர், அண்ணா பல்கலை வளாகத்திலுள்ள, கிண்டி இன்ஜி., கல்லுாரியை தேர்வு செய்தனர். மீதியுள்ளவர்களில் ஒருவர், கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரியையும், இன்னொருவர், சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியையும் தேர்வு செய்தனர்.இ.சி.இ., பாடப்பிரிவை தேர்வு செய்தது குறித்து, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கூறும் போது, 'இ.சி.இ., படித்த பலர், சாப்ட்வேர் நிறுவனங்களில் சேர்ந்து அதிக சம்பளம் பெறுகின்றனர்; வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு அதிகம்' என்றனர்.அதேபோல், கல்லுாரிகளில் நடக்கும், 'கேம்பஸ் இன்டர்வியூ' முகாம்களில், கணினி சார்ந்த ஐ.டி., நிறுவனங்களே, அதிக அளவிலான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. அதனால், இ.சி.இ., மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு அதிக மவுசு உருவாகியுள்ளது.

வேலைவாய்ப்பில் இ.சி.இ., முன்னிலை

கடந்த கல்வி ஆண்டில், சென்னை அண்ணா பல்கலையில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில், சென்னை கிண்டி இன்ஜி., கல்லுாரியில் இ.சி.இ., படித்த, 148 பேர்; கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்த, 143 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.கிண்டி இன்ஜி., கல்லுாரியில், ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவில் அதிகபட்ச வேலைவாய்ப்பு, இ.சி.இ.,க்கு தான் கிடைத்துள்ளது.குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலையின் எம்.ஐ.டி., கல்லுாரி மாணவர்களில், இ.சி.இ., - 126; கம்ப்யூட்டர் சயின்ஸ் - 107 மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேஷன் - 74 பேருக்கு, கேம்பஸ் மூலம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.மேலும், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப பிரிவில், கிண்டி கல்லுாரியில், 88 பேரும், எம்.ஐ.டி.,யில், 78 பேரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி