Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 14, 2016

5 ஆண்டு சட்டப் படிப்பு கலந்தாய்வு:ஜூலை 15-இல் தொடக்கம்.

ஐந்தாண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூலை 15-ஆம் தேதி தொடங்குகிறது.இளநிலை சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்புகளுக்கு ஏற்கெனவே விண்ணப்பங்கள் விநியோகித்துமுடிக்கப்பட்டு விட்டன. அடுத்த ஓரிரு தினங்களில் கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது.இதுபோல், 7 அரசுக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டு பி.ஏ.,எல்.எல்.பி., மூன்றாண்டு எல்.எல்.பி. சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. 5 ஆண்டு படிப்புக்கான, பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 30கடைசித் தேதியாகும்.

இதற்கான கலந்தாய்வு பல்கலைக்கழக வளாகத்தில் ஜூலை 15-இல் தொடங்க உள்ளது.மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை15ஆம் தேதி கடைசியாகும். இதற்கான கலந்தாய்வு தேதி, பல்வேறு பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளநிலை பட்டப் படிப்புகளின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி