Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 24, 2016

அரசு பள்ளிகளில், 5,865 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்க வில்லை:பள்ளி கல்வித் துறையின் செயல்பாடுகள், மிக மோசமாக உள்ளதாக மத்திய அரசு, 'டோஸ்' 

தமிழகத்தில், பள்ளி கல்வித் துறையின் செயல்பாடுகள், மிக மோசமாக உள்ளதாக மத்திய அரசு, 'டோஸ்' விட்டுள்ளது. மத்திய அரசின் நிதி உதவி திட்டங்களை அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டதாக, துறையின் செயலர் சபிதாவை நேரில் அழைத்து கண்டித்ததுடன், அவருக்கு கடிதமும் அனுப்பியுள்ளது.

அனைத்து மாணவர்களும், 10ம் வகுப்பு வரை கட்டாயம் படிக்கவேண்டும் என்ற நோக்கில், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளியாகதரம் உயர்த்த தேவையான நிதியை, மத்திய அரசு வழங்குகிறது.கடந்த, இரு ஆண்டுகளில் மட்டும், 1,700 கோடி ரூபாய்க்கு மேல், தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.இந்த திட்டப்படி, மாநில அரசின் செயல் பாடுகளை ஆய்வு செய்து, அதன்படி, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. தமிழகத்தில் பல கல்வித் திட்டங்களை கிடப்பில் போட்டு, அலட்சியமாக இருந்ததால், பள்ளிக்கல்வி செயலர் சபிதாவை டில்லிக்கு அழைத்து, மத்திய மனித வள அமைச்சக அதிகாரிகள் கண்டித்துள்ளனர்.அவருடன், திட்ட இயக்குனர் அறிவொளி, இணை இயக்குனர் குமார்ஆகியோரும்விவரங்களை கடிதமாகவும், தமிழக பள்ளி கல்வித்துறை செயலர்சபிதாவுக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ளது.

கவலையளிக்கும் கல்வித்தரம்:

* தமிழகத்தில், 10 சதவீத பகுதி களில், மக்கள் குடியிருப்பு பகுதி களில், 5 கி.மீ., சுற்றளவில் உயர்நிலைப் பள்ளிகள் இல்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும்

* 2015ல், கல்வித் துறையில் தேசிய இலக்கு கணக்கெடுப்பின் படி, உயர்நிலை கல்வி தரத்தில் தமிழகம் பின்தங்கியுள்ளது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

* தமிழகத்தில் இதுவரை, 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு அளவிலான, தொழிற்கல்விபாடத் திட்டங்கள் துவங்கப்படவே இல்லை. அதற்கு பல முறை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள்:

* மொத்தம், 1,096 புதிய பள்ளிகளில், வெறும், 200 பள்ளிகளுக்கு மட்டுமே கட்டடப் பணிகள் முடிந்துள்ளன. 845 பள்ளிகளுக்கு விரைவில் முடிக்க வேண்டும்

* 2010 - 11ம் ஆண்டில், 878 பள்ளிகள்; 2011 - 12ல், 1,153 பள்ளிகளின் கட்டடங்களை வலுவாக்க அனுமதி வழங்கப்பட்டது. இவற்றில் கழிப்பறையைத் தவிர மற்ற பணிகளில், ஒரு பள்ளியில் கூட கட்டடப் பணியை, இந்த ஆண்டு மே மாதம் வரையிலும் துவங்கவில்லை.தற்போது, கச்சா பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், இனி இந்த பணிகளை துவங்கினால், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நிதியில், பணிகளை முடிக்க முடியாது. அதே நேரம், இந்த திட்டங்களை திரும்பஒப்படைப்பதாக, மத்திய அரசிடம் தமிழக பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது

* 2010 - 11ம் ஆண்டில், 735 பள்ளிகளில் கணினி அறைகள்; 860 பள்ளிகளில், கைவினை வகுப்பறை கட்டடங்கள்; 837 பள்ளிகளில் நுாலகங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டது. அதே போல், 2011 - 12ல், 1,795 பள்ளிகளில் கைவினை அறைகள்; 919 பள்ளிகளில்அறிவியல் ஆய்வகங்கள்; 768 பள்ளிகளில், கணினி அறைகள்; 1,036 நுாலக அறைகள்; 170 பள்ளிகளுக்கு குடிநீர் வசதி போன்ற திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இவற்றையும் தற்போது திருப்பி அளிப்பதாக, தமிழக பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது

* இந்த திட்டங்களுக்கு, மத்திய அரசிடம் தமிழக அரசு புதிதாக அனுமதி கேட்கவில்லை; ஒப்புதல் கேட்டால் அளிக்க தயாராக உள்ளோம்

* தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில், 99.10 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று வெளியேறும் போது, 9ம் வகுப்பு, 10ம் வகுப்புகளில், 65.30 சதவீதம் பேரே சேர்கின்றனர். எனவே, தமிழக பள்ளிகளில் இடைநிலை கல்வியில் அதிக அளவில் இடைநிற்றல் உள்ளது.இந்த இடைநிற்றலில், கோவை - 53.72 சதவீதம்; சென்னை - 57.34 சதவீதம்; காஞ்சிபுரம் - 58.57சதவீதம் என, முன்னணியில் உள்ளன.மேலும், பொதுவாக பள்ளிப் படிப்பு இடைநிற்றல் அளவு, 2014- 15ல் 3.98 சதவீதமாக இருந்து, அடுத்த கல்வி ஆண்டில், 4.50 சதவீதமாக அதிகரித்துள்ளது

* மாணவியர் விடுதிகளில், 100 பேருக்கு, 71 பேர் மட்டுமேஉள்ளனர். விடுதியில் மாணவர்களின்எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

* தமிழகத்தில், 5,265 பள்ளிகளில் கணினி வழி, 'ஸ்மார்ட்' வகுப்புகளை துவங்க, 2010, 2011ம் ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்டது. இதில், 4,345 பள்ளிகளில் இதுவரை, 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டங்களை துவக்கவே இல்லை. இதனால், மத்திய அரசு ஒதுக்கிய, 43 கோடி ரூபாய் எந்த பயனுமின்றி உள்ளது

* அரசு பள்ளிகளில், 5,865 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்க வில்லை. 'ஆதார்' பதிவிலும் தமிழகம் பின்தங்கி உள்ளது.

இவ்வாறு மத்திய அரசு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

29 comments :

  1. Enlighten Pg trb English coaching center place Idappadi, Salem DT. Contact 9688539099.study materials available

    ReplyDelete
    Replies
    1. வழக்கை விரைந்து முடிக்க தமிழக அரசு விரும்பவில்லை .
      அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்களும் இல்லை .
      பல பாடங்களுக்கு ஆசிரியரே இல்லை
      அப்புறம் எப்படி மாணவர்கள் அரசு பள்ளியை நோக்கி வருவார்கள்????
      மறைமுகமாக அல்ல நேரடியாகவே தனியார் பள்ளிகளுக்கு அரசு ஆதரவு தருகிறது .

      அரசு பள்ளிகளில் பெரும்பாலும் கிராம புற வசதியற்ற மக்களே படிக்கின்றனர் .அடிப்படை கட்டமைப்பு &ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கே தன்னம்பிக்கை இழப்பு வர வாய்ப்பு அதிகம் .

      ஏழைகள் நல்ல படிப்பு இல்லாமல் இடை நிற்றல் மேலும் பல காரணங்களால் ஏழையாகவும் ,
      வசதி படைத்தோர் அரசு பள்ளிகளை ஒதுக்கி தனியார் பள்ளிகளுக்கு போய் படிக்க பல வசதிகள் & பயிற்சி பெற்று முன்னேற அரசு நேரடியாகவே தூண்டுகிறது .

      மக்களுக்கு இன்னும் இதன் பாதிப்பு புரியவில்லை .

      புரியும்போது கண்ணீர் மட்டுமே விட முடியும் .

      Delete
  2. Enlighten Pg trb English coaching center place Idappadi, Salem DT. Contact 9688539099.study materials available

    ReplyDelete
  3. அனைத்து புகழும் தமிழக முதலமச்சருகே......

    ReplyDelete
  4. rajapandi sir கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் date??

    ReplyDelete
  5. sc case waste so TET 90+...friends Ellorum sernthu Porattathukku date fix pannunga sir

    ReplyDelete
    Replies
    1. என்னஜீ டபக்குனு தீர்ப்பு எப்படி வரும் னு உண்மையை போட்டு உடச்சுடீங்ஙகளே ,,

      ஏற்கனவே பச்சை சட்ட பச்சை பேண்ட் பச்ச சேலை உடுத்தி நடத்திய போராட்டம் (?????) என்னவாயிற்று ??

      SC தீர்ப்பு வந்ததும் தகுதி தேர்வு நடத்தப்படும் .
      ஏற்கனவே மூன்று வருடங்கள் தேர்வு நடத்தப்படாத நிலை .
      மீண்டும் மேல்முறையீடு /போராட்டம் என்றால் எல்லோருடைய நிலையும் சங்கு தான் .
      தான்தோன்றிதனமான இந்த அரசை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது .

      வெண்ணெய் திரண்டு வரும் நேரமிது .
      தாழியை உடைக்காதீர்கள் .

      Delete
  6. TET friends ..அரசு பள்ளிகளில், 5,865 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி நம் பலத்தை காண்பிப்போம்.அரசாங்கத்தை திரும்பி பார்க்க செய்வோம். அதுவும் நேர்மறையான போராட்டத்தினால் மட்டுமே செய்யமுடியும் என்று நம்புவோம்.நம் நேர்மறையான போராட்டத்தின் பலன், வலிமை மிக பெரியது
    என்பதை அனைவரும் உணர்வோம்.கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் எப்போது ?வெற்றி நமதே..நன்றி !!

    ReplyDelete
  7. TET 90+..friends .. வழக்கை விரைந்து முடிக்க தமிழக அரசு விரும்பவில்லை.நேர்மறையான போராட்டத்தினால் மட்டுமே வெற்றி குறிக்கோளை அடைய முடியும்.

    ReplyDelete
  8. sleeping trb distrubed by central government "NARAYANA ANDHA MUSQITO(CENTRAL GOVERNMENT) VA ADICHU KOLLU"

    ReplyDelete
  9. டெட் தேவை இல்லை தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் முறையீடு .....இது எப்படி இருக்கு ?

    ReplyDelete
  10. Lab asst postings also come under this RMSA scheme... lab assts salary provide from central govt RMSA fund then why the tamilnadu govt delay the result and further process... please publish the result and fill the postings

    ReplyDelete
  11. Wen will they publish lab asst result wat hap to this gov? Neengalam....................

    ReplyDelete
  12. please if available PG Chemistry material with question papers. please contact number or send please through mail ashoktbharathi@gmail.com.

    thank you

    ReplyDelete
  13. இட மாறுதல் கலந்தாய்வை விரைவில் நடத்த வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இது போன்ற திட்டங்களை நிறைவேற்றி ஆசிரியர்களின் குறைகளைக் கலைந்தால்தான் அவர்களால் மன நிம்மதியுடன் பணியாற்ற முடியும். அப்பொழுதுதான் கல்வித்தரம் இன்னும் உயரும்.

    ReplyDelete
    Replies
    1. pg trb quick aa varuma? illa innum ippadiyay poi kondu irukuma?pls anybody tell me sir?

      Delete
  14. Lap assistant result publish panuka

    ReplyDelete
  15. solvathai seivom , seivathaithan solvom... still wait ....

    ReplyDelete
  16. MPC PG TRB Coaching center ERODE (Mathematics Only)
    * New batch starts from 26.06.16
    * Place: Tannerpandalpalayam 5 KM from Erode busstand
    * Contact: 98427-71667.,90420-71667
    * Study material available

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி