Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 14, 2016

ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்:5 பேருக்கு மறுவாழ்வு.

விழுப்புரம் மாவட்டம், நெடுகம்பேட்டையைச் சேர்ந்தவர் சேகர், 60;ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். கடந்த, 10ம் தேதி, கிராமத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி, அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சென்னை, ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூளையில் ரத்தக்கசிவு இருந்ததால், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அடுத்த நாள் மூளைச்சாவு நிலையை அடைந்தார்.அவரது மனைவி ஜோசபைன் மேரி, மகன் அருண் ஆகியோர், சேகரின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன்வந்தனர். கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல், இதய வால்வு என, ஐந்து உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டன.இவற்றை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட உடல் உறுப்பு மாற்று சிகிச்சையால், ராமச்சந்திரா மருத்துவமனை, அடையாறு மலர் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நான்கு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.'இதய வால்வு பாதுகாக்கப்பட்டு வருகிறது; தேவைப்படுவோருக்கு பொருத்தப்படும்' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி