Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 29, 2016

7th Pay:மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அமைச்சரவை இன்றுஒப்புதல் அளிக்கிறது?

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை அதிக அளவுஉயர்த்தும்படி அமைச்சரவை செயலர்கள் குழு தாக்கல் செய்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் பணியாளர்கள், ஓய்வூதியதாரர் கள் என சுமார் 1 கோடி பேர் பயனடைய உள்ளனர். மத்திய அரசு துறைகளில் பணியாற்றி வரும் கடைநிலை ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 14.27 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்தலாம் என கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் 7வது ஊதிய குழு பரிந்துரைத்திருந்தது. 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவில் ஊதி யத்தை உயர்த்த 7வது ஊதிய குழு பரிந்துரை செய்ததால், அதை திருத்த அமைச்சரவை செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான செயலர்கள் குழு அமைக்கப்பட்டது.இக்குழு ஊதிய குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து சமீபத்தில் தனது இறுதி அறிக் கையை தாக்கல் செய்தது. இந்தஅறிக்கையின் அடிப்படை யில் நிதியமைச்சகம் குறிப்பு தயாரித்து அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத் துள்ளது. பி.கே.சின்ஹா தலைமையி லான அமைச்சரவை செயலர்கள் குழு, மத்திய அரசு ஊழியர் களுக்கு மொத்தமாக 23.55 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்தலாம் என பரிந்துரைத் துள்ளது. ரூ.7 ஆயிரமாக உள்ள குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18 ஆயிரமாகவும், ரூ.90 ஆயிரமாக உள்ள அதிகபட்ச ஊதியத்தை ரூ.2.5 லட்சமாகவும் உயர்த்தலாம் என்ற 7-வது ஊதிய குழுவின் பரிந் துரையையும் அமைச்சரவை செயலர்கள் குழு திருத்தியுள்ளது. அதில் குறைந்தபட்சமாக ரூ.23,500 ஆகவும், அதிகபட்சமாக ரூ.3.25 லட்சமாகவும் ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட இந்த பரிந் துரைக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

அதன்பின் புதிய ஊதிய உயர்வு ஜனவரி 1-ல் இருந்து முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு பணியாளர்கள், ஓய்வூதி யதாரர்கள் என சுமார் 1 கோடி பேர் பயனடையவுள்ளனர். ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்படுவதால் மத்திய அரசுக்கு ரூ.1.02 லட்சம் கோடி வரை கூடுதல் நிதி சுமை ஏற்படும்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி