Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 29, 2016

7th Pay:சம்பள உயர்வு திருப்தி அளிக்கவில்லை: விரைவில் காலவரையற்ற போராட்டம்..

சென்னை : 7 வது சம்பள கமிஷன் கமிட்டியின் பரிந்துரையைஏற்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 23.55 சதவீதம் சம்பள உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஆனால் இது தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என மத்திய அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.மத்திய அரசு ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் கேட்ட அளவிற்கு மத்திய அரசு சம்பளத்தை உயர்த்தவில்லை. விலைவாசி உயர்விற்கு ஏற்றவாறு சம்பளம் உயர்த்தப்படவில்லை. ஆரம்ப சம்பளம் ரூ.23,000 ஆக இருக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் ரூ. 18,000 ஆக மட்டுமே மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதனால் சம்பள உயர்வு திருப்தி அளிக்கவில்லை. இதனால் விரைவில் போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments :

  1. 23000 அல்ல
    26000.

    அடிப்படை தொழிலாளர்களுக்கு 14.27% சம்பள உயர்வு ,
    அதிகார வர்க்கத்திற்கு 23.55% உயர்வு .

    இது நாள் வரை வழங்கப்பட்ட அலவன்சுகளில் 52 வகையான அலவன்சுகள் ரத்துசெய்துள்ளார்கள் .

    ஒரு பக்கம் ஊதிய உயர்வு ,மறுபக்கம் புடுங்கி தின்னி வேலையை பார்கிறது மத்திய அரசு .

    இந்திய ரயில்வே & மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை 11 முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தம் நடக்கும் .

    மத்திய அரசு டரியல் ஆகும்

    ReplyDelete
  2. ஜூலை 11 முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தம் நடக்கப்போகிறது .

    ரயில் பயணத்தை ஒத்திப்போட்டு கொள்ளுங்கள்

    ReplyDelete
  3. அரசு ஊழியர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய விகிதங்களை மாற்றி அமைத்து சுமூக முடிவு காண வேண்டும். அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தினையும் அமல்படுத்த முன்வர வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி