Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 1, 2016

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; நள்ளிரவு முதல் அமல்.

பெட்ரோல், டீசல் விலையை 2 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்குவந்தது.ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி மற்றும் 16ம் தேதிகளில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன.


அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58 காசுகளும், டீசல் விலை ரூ.2.26 காசுகளும் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்த விலை உயர்வு நேற்று(31-05-16) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் கலால் வரி ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடும். அதனால் ஒவ்வொருமாநிலங்களிலும் விலையில் மாற்றம் இருக்கும்.

இதன்படி தலைநகர் டில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.63.02லிருந்து, ரூ.65.60 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.51.67லிருந்து, ரூ.53.93 காசுகளும் உயர்ந்துள்ளன.சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.62.47லிருந்து, ரூ.65.04 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.53.09லிருந்து, ரூ.55.44 காசுகளும் உயர்ந்துள்ளன.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி