Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 16, 2016

கால்நடை படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (ஜூன் 17) கடைசியாகும்.கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு 320 இடங்கள், பி.டெக். உணவு தொழில்நுட்ப படிப்புக்கு 20, பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்ப படிப்புக்கு 20, பி.டெக். பால்வளத் தொழில்நுட்ப படிப்புக்கு 20 என மொத்தம் 380 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய ஜூன் 9 கடைசித் தேதி என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 17 கடைசித் தேதியாகும். இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் படிப்புகளுக்காக விண்ணப்பித்துள்ளனர்.ஜூலை முதல் வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஆகஸ்ட் முதல் அல்லது 2-ஆவது வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி