Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 16, 2016

வேகமாக பரவுது இலவச கால் வசதி தரும் ஆப்ஸ்

2ஜி சேவை உள்ளிட்ட இலவசதொலைபேசி அழைப்பு சேவை வழங்கும் புதிய ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த ஆப்ஸ் இந்தியாவில் அதிகமானவர்களால் டவுன்லோட் செய்யப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரைச் சேர்ந்த இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனம் 'நானு' உலகின் பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இதன்படி இந்த ஆப்ஸ் பயன்படுத்துவோர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இலவச தொலைபேசி அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை பெற முடியும். இலவச சேவை வழங்குவதற்காக ஒவ்வொரு மாதமும் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, சிங்கப்பூர் நிறுவனம் 20,000 அமெரிக்க டாலர்களை வழங்கும்.

நானு (nanu) என்ற இந்த ஆப்ஸை இதுவரை உலகம் முழுவதும் 2.6 மில்லியன் பேர் டவுன்லோட் செய்துள்ளனர். இவர்களில் 60 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வியாபார யுக்தியாக இந்த ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு முறை கால் செய்யும் போதும், எதிர்முனையில் இருப்பவர்கள் அதனை எடுக்க ஆகும் 10 விநாடி காலத்திற்குள் பெறப்படும் விளம்பரங்கள் மூலம் இந்நிறுவனத்திற்கு வருமானம் கிடைப்பதால், இலவச தொலைபேசி வழங்க முடிகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2 comments :

  1. bt science mutual transfer from villupuram to chennai,thiruvallur,kancheepuram. please contact 8428895158,8015333658

    ReplyDelete
  2. MPC TRB coaching center ERODE
    Starts new batch for PG TRB (Mathematics only) from June 19th sunday onwords
    Place: 5 KM from erode bus stand Thannerpandalpalayam
    Contact: 9842771667, 9042071667
    " Study material available"

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி