Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 3, 2016

பி.சி., எம்.பி.சி., வகுப்பினருக்கு பொருளாதார மேம்பாட்டுக் கடன்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் சார்பில் 6% வட்டியில் தொழில் மற்றும் வணிகம் செய்ய கடன் வழங்கப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலரும், ஆட்சியருமான (பொ) மு. அருணா தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் சார்பில் பல்வேறு கடன் உதவித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் தொழில் மற்றும் வணிகம் செய்ய கடன்பெற விண்ணப்பிக்கலாம். தகுதிகள்: ஆண்டு வருமானம் கிராமப் புறங்களில் ரூ.98,000-ம், நகர்ப்புறங்களில் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். வயது வரம்பு 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். 6% வட்டியில் கடன் வழங்கப்படும்.

கடன் விண்ணப்பத்துடன் சாதிச் சான்று நகல், வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை நகல், நிறுவனம் ஒன்றில் இருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம்(போக்குவரத்து வாகனங்களுக்கு கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி கோரும் இதர ஆவணங்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments :

  1. கடன் கிடைக்கும் என்ற போதினிலே- இன்ப தேன் வந்து பாய்து காதினிலே

    கேக்க நல்லாதான் இருக்கு But ஒரு..... நடக்காது...

    BC, MBC லையும் பணக்காரன் இருக்குறான்., அவங்கலுக்கு மட்டும் தான் இந்த பாழா போன வங்கி பணத்தை வாரியும், கோரியும் கொடுக்கும்....

    அரசுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். கடன் தருகிறோம் என்ற பெயரில் மக்களை அலக்கழிக்க வேண்டாம்...

    நீங்க கடன் தராட்டாலும் பரவால்லை..

    ReplyDelete
  2. Correct ta soninga sir athan unmai

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி