Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 12, 2016

ஏ.டி.எம்., கட்டுப்பாடு எதிர்த்த வழக்கு தள்ளுபடி

பிற வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்த ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரிய வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.மதுரை சொக்கிகுளம் தமிழரசன் தாக்கல் செய்த மனு:

இந்திய வங்கிகள் சங்கத்தின் பரிந்துரைப்படி, ஏ.டி.எம்.,களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதை வரைமுறைப்படுத்தி, ரிசர்வ் வங்கி, சுற்றறிக்கை வெளியிட்டது. அதன்படி, கட்டணமின்றி பிற வங்கி ஏ.டி.எம்., களில் பணம் எடுக்கும் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

ஏ.டி.எம்.,களை அமைத்ததன் நோக்கம், மக்களுக்கு உதவி செய்யவே. வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்த வேண்டுமே தவிர, ஏற்கனவே வழங்கி வரும் சலுகையை குறைக்கக்கூடாது. பிற வங்கி ஏ.டி.எம்., களில் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்துள்ள ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு தமிழரசன் மனு செய்திருந்தார்.தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி நுாட்டி.ராமமோகன ராவ் கொண்ட அமர்வு, 'ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவில், நீதிமன்றம் தலையிட முடியாது' என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி