Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 29, 2016

புத்தகமில்லா பள்ளி நாளைக் கொண்டாடிய மாணவர்கள்


புத்தகப்பைகளைச் சுமக்காமல் வெறும் கைகளுடன் பள்ளிக்குவந்து புத்தகமில்லா நாளை உற்சாகத்துடன் மாணவ, மாணவிகள் இன்று கொண்டாடினர்.

புத்தகங்கள்தான் அறிவை விரிவடையச்செய்கிறது.  புத்தகங்களால் ஓய்வு நேரத்தையும் பயனுள்ளதாக்கிக் கொள்ள முடியும். எச்சந்தர்ப்பத்திலும் நம்மை விட்டுப் பிரியாத நண்பர்கள் புத்தகங்களே.  புத்தகங்கள் அலங்காரப்பொருளாக இல்லாமல் அறிவைப் பெருக்கும் பொருளாக மாற வேண்டும். மாணவர்களின் அறிவுத் தாகத்தை திணிப்பதும் புத்தகங்கள்தான். இவ்வாறு பல வழிகளில் புத்தகங்கள் நம்மால் உணரப்பட்டுள்ளன.இந்நிலையில், ஒரு நாள் முழுதும் புத்தகங்களே இல்லாமல் ஒரு நாளை பள்ளி மாணவர்கள் கொண்டாடியதை வித்தியாசமான நிகழ்வாகப் பார்க்க முடிந்தது.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் வெங்கடேஸ்வரா மேனிலைப்பள்ளியில் இன்று மாணவ, மாணவியர் பள்ளிக்கு பாட புத்தகங்கள் இல்லாமல் வருகை தந்து சக மாணவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள் எல்.கே.ஜி முதல் மேல்நிலை படிக்கும் மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடிக் கொண்டனர்.புத்தகமில்லாத் தினத்தையொட்டி  களக்கமங்கலம் சக்திவேல்குழுவினரின் இசைப்பாடல்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாணவர்களும் ஆடிப்பாடி புத்தகமில்லா தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளுடன் மாணவர்கள் அமர்ந்து ஒருவருக்கொருவர் உரையாடிக்கொண்டும், கதை பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும், கவிதைகள் பாடல்கள் பரிமாறிக் கொண்டும் ஆனந்தமடைந்தனர்.

1 comment :

  1. 100 நாள் பயிற்சி 100% தேர்ச்சி
    TT ACADEMY KAMARAJAR NAGAR FIRST CROSS COLLEGE ROAD ARIYALUR-621704
    CELL.NO: 9942571857/ 7845138526
    WWW.TT ACADEMY ARIYALUR.IN
    GROUP-IV-வகுப்புகள் துவங்கும் நாள்-02-07-2016
    தமிழகத்திலேயே முதல் முறையாக மனவரைபடமுறையில்(MIND MAP METHOD) பயிற்சி அளிக்கும் ஒரே நிறுவனம்
    மாற்றுத்திறனாளிகள், தாய்,தந்தை இல்லாதவர்கள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு இலவசப்பயிற்சி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி