Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 3, 2016

பள்ளி விடுதிகளில் சேர விண்ணப்பிக்க வேண்டுகோள்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி விடுதிகளில் சேர வரும் 19- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2016-17-ஆம் கல்வியாண்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதிகளில் சேர தகுதி உள்ள மாணவ - மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.விண்ணப்பப் படிவத்தை தொடர்புடைய விடுதி காப்பாளர் அல்லது காப்பாளினிகளிடம் இருந்து இலவசமாகப் பெற்று, இரு புகைப்படம், வங்கிக் கணக்கு விவரம், பயிலும் பள்ளி, கல்லூரி தலைவரின் ஒப்புதல் பெற்று குறிப்பிடப்பட்ட நாள்களுக்குள்,தொடர்புடைய விடுதிக் காப்பாளர், காப்பாளினிகளிடம் நேரில் ஒப்படைக்க வேண்டும்.

பள்ளி விடுதியில் சேர வரும் 19-ஆம் தேதிக்கு முன்னரும், கல்லூரி விடுதியில் சேர ஜூலை 14-ஆம் தேதிக்கு முன்னரும் விண்ணப்பிக்க வேண்டும். விடுதியில் சேர விரும்பும் மாணவ- மாணவியரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு விடுதியிலும் 5 இடங்கள் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி