Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 22, 2016

ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு முறைகள் கட்டாயமாக்க வேண்டும் - புதிய கல்விக் கொள்கை குழு பரிந்துரைகள் விவரம்.

நாடு முழுவதும் கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது... கல்வி கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசால் அமைக்கப்பட்ட முன்னாள் உள்துறை செயலாளர் டி,எஸ்.ஆர். குழு சமர்பித்த பரிந்துரைகள் :

*.ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு முறைகள் கட்டாயமாக்க வேண்டும். ஆசிரியர் படிப்பிற்கு குறைந்தபட்ச தகுதியாக பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்கள் கட்டாயமாக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த பொதுவான நெறிமுறைகளை மத்திய மாநில அரசுகள் கலந்தாலோசித்து உருவாக்க வேண்டும்.

*.ஆசிரியர் தேர்வானது வெளிப்படை தன்மையுடனும் நடுநிலையாகவும் நடத்தப்பட வேண்டும்.

*.தொடக்கப்பள்ளி அசிரியர்கள் தேர்வு மாவட்ட அளவில் நடைபெற வேண்டும்.

*.அரசாங்க பள்ளிகளிலோ, தனியார் பள்ளிகளிலோ ஆசிரியராக பணியாற்றுபவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது தகுதி சான்றிதழ்களை தேர்வுகள் மூலம் புதுப்பிக்க வேண்டும்.

*.ஆசிரியர் படிப்புகள் தற்போது இரண்டு ஆண்டுகளாக உள்ளதைமாற்றி வேலை வாய்ப்பு உறுதியுடன் கூடிய ஒருங்கிணைந்த 4 வருட படிப்பாக மாற்றலாம்.

*.முன்பள்ளி கல்வி என்று சொல்லப்படுகின்ற பால பாடமானது 4 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு அடிப்படை உரிமை என்பதை அறிவித்து உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

*.5 வது வகுப்பு வரையிலான கட்டாய பாஸ் முறையானது தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டும். அதேபோல் மேல் நிலைபள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு செல்லும் போது தேர்வில் தோல்வியடைந்தால் தகுதியினை நிருபிக்க 2வாய்ப்பு வரை வழங்கலாம்.

*.10வது வகுப்பு பொது தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அறிவியல் மற்றும் கணித பாடங்களில் 2 வகையாககலந்து கொள்ளலாம். எதிர்காலத்தில் கணிதம் மற்றும் அறிவியல் படிப்புகளை தொடர்ந்து படிக்க போகும் மாணவர்கள் முதல் தர தேர்வுகளையும், அல்லாதவர்கள் 2ம் தர தேர்வுகளை எழுதலாம். இது மாணவர்களின் சொந்த விருப்பத்திற்கு ஏற்றது.

*.போர்ட் தேர்வுகள் பெற்றோர் மற்றும் மாணவர்களின் மன அழுத்ததை குறைக்கு வகையில் இருக்க வேண்டும். 12 வது வகுப்பை எந்த முறையினால கல்வி பயின்று முடித்த மாணவர்களும் கலந்து கொள்ளும் வகையிலான தேசிய அளவிலான பொது நுழைவு தேர்வு ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் நிறைய பொது தகுதி தேர்வுகளை மாணவர்கள் எழுதுவதை குறைக்க முடியும்.

*.5 வது வகுப்பு வரை தாய் மொழியிலேயே பாடம் கற்கலாம். பிரைமரி வகுப்புகளின் 2 வது மொழியையும், செக்கண்டரி வகுப்புகளில் 3 வது மொழியையும் அந்தந்த மாநில அரசுகளேமுடிவு செய்யும்.

*.மத்திய உணவு திட்டமானது உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வகை செய்ய வேண்டும் . ஏனென்ன்றால் இது அத்தியாவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஊட்டசத்து குறைபாடு, இரத்த சோகை நோய் ஆஅகியவை இளம் தலைமுறை மாணவர்களிடையே அதிக அளவில் உள்ளது எனவே உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவு திட்டத்தினை விரிவுபடுத்த வேண்டும்.

*.கல்வி உதவி தொகைகள் சரியாக பிரித்து வழங்குவது தொடர்பாக பல்கலைகழகங்களுக்கான மாணிய குழு ஆணையம் (யூஜிசி) எளிமையானது வரை  முறைகளை உருவாக்க வேண்டும்.

*.உலகின் தலை சிறந்த 200 வெளிநாடு பல்கலைகழகங்கள் நாட்டில் தங்களது கிளையினை உருவாக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.

*.பல்கலைகழகங்களில், கல்வி நிறுவங்களில் மாணவ்ர்கள் பிரச்சனை உடனைடியாக தீர்க்கப்பட வேண்டும். சம அளவிலான பேச்சு மற்றும் கருத்து சுதந்திடம் உறுதிபடுத்தப்பட வேண்டும்.

*.கல்வி ஊக்குவிப்பு அட்டவணை இன்னும் அறிவியல் பூர்வமாகதகுதி உயர்த்தப்பட வேண்டும்.

*.கல்வி கொள்கைகள் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளவும், சீர்திருத்தங்கள் கொண்டு வரவும், மத்திய அரசுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவார்ந்த உயர்நிலை குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

3 comments :

 1. MPC PG TRB Coaching center ERODE (Mathematics Only)
  * New batch starts from 26.06.16
  * Place: Tannerpandalpalayam 5 KM from Erode busstand
  * Contact: 98427-71667.,90420-71667
  * Study material available

  ReplyDelete
 2. Enlighten Pg trb English coaching center place :Idappadi, Salem DT.study materials available contact 9688539099

  ReplyDelete
 3. Enlighten Pg trb English coaching center place :Idappadi, Salem DT.study materials available contact 9688539099

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி