Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 14, 2016

சிறப்பு துணைத்தேர்வு செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு.

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு, அறிவியல் செய்முறை தேர்வு, ஜூன், 20, 21ம் தேதிகளில் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தேர்வுத்துறைஇயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, அறிவியல் பாட செய்முறைத்தேர்வில் தேர்ச்சி பெறாதோர் மற்றும் அறிவியல் பாட பயிற்சி வகுப்பிற்கு, 80 சதவீதம் வருகை புரிந்து, செய்முறைத் தேர்வில் பங்கேற்காதவர்கள், தனித்தேர்வராக செய்முறைத் தேர்வில் பங்கேற்கலாம். மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள், ஜூன், 20, 21 தேதிகளில் நடக்கும் சிறப்பு துணைத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வில் பங்கேற்கலாம்.

இது குறித்த முழு விவரங்களையும், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு, இது குறித்து அறிவிப்பு அனுப்பப்படாது. இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி