Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 14, 2016

இலவச பாடப் புத்தகங்கள்: கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு.

சென்னை ஜெய்கோபால் கரோடியா தொண்டு நிறுவனத்தின் புத்தக வங்கி சார்பில் இலவச பாடப் புத்தகங்கள் பெற கல்லூரி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த புத்தக வங்கி மூலம் தமிழகம் முழுவதிலும் இருந்து250 கல்லூரிகளைச் சேர்ந்த 85 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இப்போது பொறியியல், வணிகம், கலை, அறிவியல், கணினி அறிவியல், மேலாண்மை உள்ளிட்ட பாடங்களில் 600 தலைப்புகளில் 35 ஆயிரம் புத்தகங்கள்வரை இருப்பில் உள்ளன.

இந்தப் புத்தகங்களைப் பெற விரும்பும் மாணவர்கள்""கதவு எண்: 6, ஏழாவது தெரு, யு பிளாக், அண்ணா நகர், சென்னை'' என்ற முகவரியில் விண்ணப்பங்களைப் பெற்று, இருப்பிடச் சான்று, கல்லூரி அடையாள அட்டையுடன் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. தங்களின் தேர்வு முடிந்த பின் புத்தகங்களை மாணவர்கள் ஒப்படைக்க வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு www.jgvvbookbank.org  என்ற இணையதள முகவரியிலும், 044 26206261 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று புத்தக வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி