Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 29, 2016

பயிற்றுநர்களுக்கான பயிற்சி தொடக்கம்.

மத்திய கல்வி, ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி), தமிழக அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) ஆகியவை சார்பில் பயிற்றுநர்களுக்கான 5 நாள் பயிற்சி சென்னை டிபிஐ வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.இந்தப் பயிற்சியைத் தொடக்கிவைத்து என்சிஇஆர்டியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரஞ்ஜனா அரோரா பேசியதாவது:

என்சிஇஆர்டி சார்பில் கற்பித்தலைத் தாண்டி, கணிதம், அறிவியல் பாடக் கருத்துகளை மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளச் செய்வதற்கான திட்டக் கருத்துரு தயாரிக்கப்பட்டு, தேசிய பயிற்சியாளர்களைக் கொண்டு ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.தமிழகத்தில் முதல்முறையாக ஆர்எம்எஸ்ஏவுடன் இணைந்து இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு ஆசிரியர் இந்தப் பயிற்சியைப் பெற்று, அவர்கள் மற்ற ஆசிரியர்களுக்குப்பயிற்றுவிப்பார்கள். முக்கியப் பாடங்களை செய்முறை மூலம் கற்பிக்கும்போது மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள்.

இதைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் தங்கள் மாவட்டத்தில் அளிக்கும் பயிற்சி குறித்தும், பயிற்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் விரிவான கருத்துக்கள் ஆர்எம்எஸ்ஏவிடம் பெறப்படும் என்றார்.நிகழ்ச்சியில் மாநில ஆர்எம்எஸ்ஏ இயக்குநர் ஜி. அறிவொளி, துணை இயக்குநர் வி.குமார், என்சிஇஆர்டி பேராசிரியர் வி.வி.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி