Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 6, 2016

மாணவர் சேர்க்கை சிக்கல் தீர்க்க குறைதீர் குழு:கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., உத்தரவு

கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், மாணவர் சேர்க்கை, புதிய கல்வியாண்டு துவக்கம் குறித்த சந்தேகங்களை போக்க, 24 மணிநேர குறைதீர் குழுவை அமைக்க, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும், 2015 - 16ம் கல்வியாண்டு முடிந்து, 2016 - 17ம் கல்வியாண்டு துவங்கியுள்ளது.

கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் துவங்கியுள்ளன. இன்னும் ஓரிரு வாரத்தில், கல்லுாரிகளில் வகுப்புகள் துவங்க உள்ளன. கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புக்காக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.இதில் விருப்பமான பாடப்பிரிவு, விரும்பிய கல்லுாரி கிடைப்பதில், மாணவர்கள் பல சவால்களை சந்தித்து வருகின்றனர். தேவையான மதிப்பெண் எடுத்திருந்தும், கல்லுாரியின் மாணவர் சேர்க்கை குழுவை எப்படி அணுகுவது; விண்ணப்பங்களை எங்கே பெறுவது என்ற குழப்பம்ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மாணவர்களின் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில், அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளில், 24 மணிநேரமும் இயங்கும் குறை தீர் குழுவை நியமிக்க, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.இந்த குழுவினர், எந்த நேரமும் நேரிலும், தொலைபேசியிலும், பெற்றோர் மற்றும் மாணவரின் சந்தேகங்களுக்கு விடையளிக்க வேண்டும். மேலும், மாணவர்சேர்க்கை தொடர்பான புகார்கள், கோரிக்கைகள் வந்தால் அதை உடனடியாக, கல்லுாரி, பல்கலை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய தீர்வை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும் என்றும், யு.ஜி.சி., உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி