Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 23, 2016

டான்செட் பொது நுழைவுத்தேர்வு: ஒரு வாரத்தில் முடிவு வெளியீடு

எம்பிஏ, எம்சிஏ மற்றும் எம்இ, எம்டெக் உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான டான்செட் எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகத்தால் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான டான்செட் நுழைவுத்தேர்வு ஜுன் 11, 12-ம் தேதிகளில் நடைபெற்றது.
எம்பிஏ, எம்சிஏ நுழைவுத்தேர்வு 11-ம் தேதி நடந்தது. இத்தேர்வை 22 ஆயிரம் பேர் எழுதினர். எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான். படிப்புகளுக்கான டான்செட் தேர்வு 12-ம் தேதி நடந்தது. இத்தேர்வை 17 ஆயிரம் பேர் எழுதினார்கள்.தேர்வு முடிவு குறித்து டான்செட் செயலாளரும், அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் இயக்குநருமான பேராசிரியை பி.மல்லிகாவிடம் கேட்டபோது, “டான்செட் தேர்வு வினாத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

டான்செட் தேர்வெழுதிய மாண வர்கள் வெவ்வேறு படிப்புகளில் சேர தனியாக விண்ணப்பிக்க வேண்டும். அந்த வகையில், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கு ஜூலை 4 முதல் 15-ம் தேதி வரை ஆன்லைனில் (www.gct.ac.in) விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி