Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 21, 2016

தேர்வுநிலை சான்றிதழ் கிடைக்கல: பட்டதாரி ஆசிரியர்கள் முறையீடு.

பட்டதாரி ஆசிரியர்கள் கழக பிரதிநிதிகள் சார்பில், தேர்வுநிலை சான்றிதழ் வழங்கக்கோரி, கரூர் சி.இ.ஓ.,விடம் கோரிக்கை மனு அளித்தனர்.கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், நேற்று மாலை, 6 மணிக்கு முதன்மை கல்வி அலுவலர் ராமசாமியிடம், 50க்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் கழக பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது: கடந்த, பத்து ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தேர்நிலை சான்றிதழ் வழங்கப்படும். இதன்படி, முதன்மை கல்வி அலுவலகம் மூலம், 480 ஆசிரியர்கள் இயக்குனரகத்துக்கு விண்ணப்பித்தனர். இதில், 180 ஆசிரியர்களுக்கு மட்டுமே, அந்த சான்றிதழ் வழங்கப்பட்டது. இச்சான்றிதழ் கிடைக்காவிட்டால், பதவி உயர்வு உட்பட பல்வேறு சலுகைகள் கிடைக்க வாய்ப்பு இல்லை.எனவே, விடுபட்டவர்களுக்கு விரைவில் சான்றிதழ் பெற்றுத்தர நடவடிக்கை வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி