Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 28, 2016

ஒரே மாதிரி பெயர் கொண்ட பொறியியல் கல்லூரிகள்: அண்ணா பல்கலை. வெளியீடு.

ஒரே மாதிரியான பெயர்கள் கொண்ட பொறியியல் கல்லூரிகளின் விவரத்தை www.annauniv.edu என்ற இணையதளத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.2016-17ஆம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் 525 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இவற்றில் உள்ள அரசு ஒதுக்கீட்டிலான பி.இ. இடங்களை கலந்தாய்வு மூலம்  நிரப்பப்பட்டு வருகிறது.இந்த நிலையில், கல்லூரியின் தரம் குறித்து ஓரளவுக்கு எடைபோடுகின்ற வகையில், அனைத்துப் பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகித விவரத்தையும், ஓரே மாதிரி பெயர் கொண்ட பொறியியல் கல்லூரிகளின் பட்டியலையும் ஆண்டுதோறும் பல்கலைக்கழகம் வெளியிட்டு வருகிறது.நிகழாண்டிலும் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

இதில், ஓரே மாதிரி பெயர் கொண்ட 200-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளின் விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன.இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி கூறுகையில், மாணவர்கள் நலன் கருதியே விவரங்கள் வெளியிடப்படுகின்றன. கல்லூரியின் பெயரை வைத்து அல்லாமல், குறியீட்டு எண் அடிப்படையில் மாணவர்கள் இடத்தைத் தேர்வு செய்தால் எந்தவித குழப்பமும் வராது என்றார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி