Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 29, 2016

சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.

சென்னைப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (ஜூன் 30) வெளியிடப்பட உள்ளன.2016 ஏப்ரலில் நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான இந்தத் தேர்வு முடிவுகளை www.result.unom.ac.in, www.ideunom.ac.in, http:egovernance.unom.ac.in  ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

மறுமதிப்பீடு:

தேர்வு மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஜூலை 1-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை பல்கலைக்கழக இணையதளத்தில் ஆன்-லைனில் பதிவு செய்து, அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ரூ. 1,000-க்கான வங்கி வரைவோலையை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

மறுகூட்டல்:அதுபோல, மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களும், ஆன்-லைனில் பதிவு செய்த விண்ணப்பத்துடன் ரூ. 300-க்கான வங்கி வரைவோலையை இணைத்து ஜூலை 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஜூலை 23-இல் உடனடித் தேர்வு:இளநிலை பட்டப் படிப்பில் 5-ஆவது பருவத் தேர்வு வரை அனைத்துப் பாடங்களில் தேர்ச்சி பெற்று, 6-ஆவது பருவத் தேர்வில் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியுற்றவர்கள் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.அதுபோல முதுநிலை பட்டப் படிப்பில் 3-ஆவது பருவத் தேர்வுவரை அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று, 4-ஆவது பருவத் தேர்வில் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியடைந்தவர்களும் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தொழில் படிப்பு மாணவர்களும் உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

 இதற்கான விண்ணப்பங்களைச்சமர்பிக்கவும் ஜூலை 8 கடைசித் தேதியாகும்.இந்த உடனடித் தேர்வு சென்னையில் மூன்று மையங்களில் ஜூலை23-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்வறை அனுமதிச் சீட்டை ஜூலை 18-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

1 comment :

  1. 100 நாள் பயிற்சி 100% தேர்ச்சி
    TT ACADEMY KAMARAJAR NAGAR FIRST CROSS COLLEGE ROAD ARIYALUR-621704
    CELL.NO: 9942571857/ 7845138526
    WWW.TT ACADEMY ARIYALUR.IN
    GROUP-IV-வகுப்புகள் துவங்கும் நாள்-02-07-2016
    தமிழகத்திலேயே முதல் முறையாக மனவரைபடமுறையில்(MIND MAP METHOD) பயிற்சி அளிக்கும் ஒரே நிறுவனம்
    மாற்றுத்திறனாளிகள், தாய்,தந்தை இல்லாதவர்கள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு இலவசப்பயிற்சி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி