Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 24, 2016

விஸ்வரூபம் எடுக்கும் அரசு ஊழியர்களின் மருத்துவ காப்பீட்டு திட்டம் சார்ந்த கோரிக்கைகள்..

விஸ்வரூபம் எடுக்கும் அரசு ஊழியர்களின் மருத்துவ காப்பீட்டு திட்டம் சார்ந்த கோரிக்கைகள்..




*  100% கட்டணமில்லா சிகிச்சைக்கான உத்தரவாதம் வழங்க வேண்டும்.



*  01.07.16 முதல் காப்பீட்டுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்காமல் மற்ற மாநிலங்களைப் போல் தமிழக அரசும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.



*  முன் பணம் செலுத்தி சிகிச்சை பெற வேண்டிய நிலை மாற வேண்டும்.



*  உள் நோயாளியாக அனுமதிக்கபடும் அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு அனைத்து சிகிச்சைகளுக்கும்  100% கட்டணமில்லாமல் வழங்கப்பட வேண்டும்.



* வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள அனுமதி வழங்க வேண்டும்.



* அனைத்து மருத்துவமனைகளிலும் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தினை விரிவுபடுத்த வேண்டும்.

* ஏதேனும் காரணங்களால் சிகிச்சையை நிராகரிக்கும் மருத்துவமனை நிர்வாகம் அதற்கான காரணத்தினை எழுத்துப்பூர்வமாக வழங்கவேண்டும்.

* ஏதேனும் காரணத்தினால் 100% காப்பீடுத் தொகை வழங்காமல் நிராகரிக்கும் பட்சத்தில் அதற்கான காரணத்தினையும் மருத்துவமனை நிர்வாகம் (அ) காப்பீட்டு நிறுவனம் எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும்.

* 4 ஆண்டுகளில் 7.5 லட்சம் காப்பீட்டுத் தொகைக்கு அதிகமாக சிகிச்சை பெரும் பட்சத்தில் மட்டும் கூடுதலாக செலவாகும் தொகையினை அரசு ஊழியர்கள் தங்களின் கையிலிருந்து செலுத்துமாறு வழிவகை செய்திட வேண்டும்..

* மருத்துவ காப்பீட்டிற்காக பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ.150 ஐ அதிகப்படுத்தக் கூடாது.

தோழமையுடன்,
தேவராஜன்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி