Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 5, 2016

உள்ளாட்சி தேர்தலுக்குள் முன்பாக மகப்பேறு விடுப்பு உயர்வு ?

உள்ளாட்சி தேர்தலுக்கு முன், மகப்பேறு விடுப்பை ஒன்பது மாதமாக அறிவிக்க, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அதிகாரிகள்,அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். அரசு துறைகளில் பணிபுரியும் பெண்கள், தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க, தற்போது, ஆறு மாதம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை யில், 'மகப்பேறு கால விடுப்பு, ஒன்பது மாதமாக உயர்த்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள அ.தி.மு.க., அரசு, பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பை, ஒன்பது மாதங்களாகஉயர்த்தி அறிவிக்க உள்ளது.

இதுகுறித்து, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அதிகாரிகள், கடந்த சில நாட்களாக ஆலோசனை மேற்கொண்டனர். முடிவில், பெண்களின் ஓட்டுகளை கவர, உள்ளாட்சி தேர்தலுக்கு முன்,இதை அமல்படுத்தும்படி, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி