Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 27, 2016

TET தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய இயலவில்லை. : மத்திய அரசுக்கு முதன்மைச் செயலர் திருமதி. சபிதா விளக்கம்.தமிழகத்தில், பள்ளிக் கல்வி தரம் குறைந்தது தொடர்பாக,மத்திய அரசின் கேள்விகளுக்கு, பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் சபிதா விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய மனித வள அமைச்சகத்தின், பள்ளிக் கல்வி பிரிவு செயலர் குந்தியா, அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இயக்குனர் நிகர் பாத்திமா உசைன் ஆகியோர் தலைமையிலான கூட்டத்தில், தமிழக பள்ளிக் கல்வி செயலர் சபிதாவுடன், திட்ட இயக்குனர் அறிவொளி, இணை இயக்குனர் குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மத்திய அரசின் கேள்விகளுக்கு, செயலர் சபிதா அளித்துள்ள விளக்கம் வருமாறு:

1,096 புதிய பள்ளிகளில், 845 பள்ளிகளுக்கு இன்னும் கட்டடப் பணிகள் முடியாதது ஏன்?

 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன; ஒரு ஆண்டில் முடித்து விடுவோம்.கடந்த, 2010 முதல், 2,031 பள்ளிகளை மேம்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

கழிப்பறை தவிர மற்ற பணிகளை மேற்கொள்ளவே இல்லையே?

கட்டுமான செலவு உயர்ந்து விட்டதால், 878 பள்ளிகளுக்கான திட்ட அனுமதியை, திரும்ப ஒப்படைக்கிறோம். மீதமுள்ளவற்றுக்கு, தேவைப்பட்டால் மறு ஒப்புதல் பெற்றுக் கொள்கிறோம்.(மறு ஒப்புதல் அளித்தாலும், கூடுதல் செலவை மத்திய அரசு ஏற்காது என, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்)தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், 99.10 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வெளியேறும் போது, 9, 10ம் வகுப்புகளில், 65.30 சதவீதம் பேரே சேர்கின்றனர். மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கோவை - 53.72 சதவீதம்; சென்னை - 57.34; காஞ்சிபுரம் - 58.57 சதவீதம் என முன்னணியில் உள்ளனவே?

சென்னை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்கள், தொழிற்சாலை, வணிக பகுதிகள் நிறைந்தவை. இங்கு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலும், தொழில் திறன் சார்ந்த படிப்புகளுக்காக, 8ம்    வகுப்பு முடித்ததும், ஐ.டி.ஐ.,யில் படிக்கச் செல்வதால், 9, 10ம் வகுப்பில் இந்த வித்தியாசம் ஏற்படுகிறது.

பள்ளிப் படிப்பு இடைநிற்றலை தடுக்க என்ன செய்துள்ளீர்கள்?

அதற்காகத்தான், தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச, 'லேப்டாப், சைக்கிள்' போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

மாணவியர் விடுதிகளில், 100 பேருக்கு, 71 பேர் மட்டுமே உள்ளனரே?

விடுதிகள், வாடகை கட்டடத்தில் இயங்குவ தால், இந்த நிலை உள்ளது. இனி, மத்திய அரசின் இலக்கை எட்டி விடுவோம்.

தமிழகத்தில், 10 சதவீத பகுதிகளில், 5 கிலோ மீட்டர் சுற்றளவில், உயர்நிலைப் பள்ளிகள் இல்லாதது ஏன்?

எதிர்காலத்தில் இந்த நிலை இல்லாமல், 5 கிலோ மீட்டருக்குள் பள்ளிகளை கொண்டு வருவோம்.

கடந்த, 2015ம் ஆண்டு தேசிய கணக்கெடுப்பின் படி, உயர்நிலைக் கல்வியின் தரம், தமிழகத்தில் பின்தங்கியுள்ளது ஏன்?

மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டப்படி, இந்த   கணக்கெடுப்பு நடத்தியுள்ளதால், தமிழக பாடத்திட்ட மாணவர்களிடையே இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தேசிய ஆசிரியர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம்,  ஆலோசனை நடத்த உள்ளோம்.

தமிழகத்தில், 5,265 பள்ளிகளில் கணினி வழி, 'ஸ்மார்ட்' வகுப்புகளை துவங்க, 2010 - 11ம் ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்டது. இதில், 4,345 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு  திட்டங்களை துவங்காதது ஏன்; இதனால், மத்திய அரசு ஒதுக்கிய, 43 கோடி ரூபாய் தூங்குகிறதே?

இந்த திட்டத்துக்கான, 'டெண்டர்' விடுவதில், சில பிரச்னைகள் ஏற்பட்டன. விரைவில்,  பணிகளை துவங்கி விடுவோம்.

அரசு பள்ளிகளில், 5,865 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லையே?

 ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய இயலவில்லை.

ஆதார் பதிவில், 34 சதவீத மாணவர்கள் இன்னும் சேர்க்கப்படாமல், தமிழகம் பின்தங்கியுள்ளது ஏன்?

இலக்கை எட்ட தேவையான முயற்சிகளை விரைவில் மேற்கொள்வோம்.

தமிழகத்தில் இதுவரை, 9, 10ம் வகுப்பு அளவிலான, தொழிற்கல்வி பாடத் திட்டங்கள் துவங்கவே இல்லை. மத்திய அரசு பல முறை அறிவுறுத்தியுள்ளதே?

நடவடிக்கை எடுக்கிறோம்; விரைவில் அறிவிப்பு வெளியிடுவோம். இவ்வாறு பள்ளிக் கல்வி செயலர் சபிதா விளக்கம் அளித்துள்ளதாக, மத்திய அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது.

39 comments :

 1. Replies
  1. Dear Admin sir which caste candidates get remaining 30% postings in adi dravida welfare secondary grade teachers appointment by the judgement of court?????

   Delete
 2. TET case death aaki 3 years aakivittathu

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. That is why we saying she is not the right person for that school education secretary post ..she is total dominant..first the tn govt change her post last three years she didn't give any response for tet case butnow she is telling case is going on....

  ReplyDelete
  Replies
  1. please admin sir / any one sir please translate following judgement
   BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
   ( Special Original Jurisdiction )

   Monday, the Eighteenth day of April Two Thousand Sixteen

   PRESENT
   The Hon`ble Mrs Justice PUSHPA SATHYANARAYANA

   WP(MD) No.16547 of 2014

   S.RAMAR ... PETITIONER
   Vs
   1 THE STATE OF TAMILNADU
   REP BY THE SECRETARY,
   SCHOOL EDUCATION & DEPARTMENT,
   ST. FORT GEORGE, CHENNAI-9.
   2 THE DIRECTOR
   AADHI DRAVIDAR WELFARE DEPARTMENT,
   ST. FORT GEORGE, CHENNAI-9.
   3 THE CHAIRMAN
   TEACHER RECRUITMENT BOARD,
   4TH FLOOR, EVK SAMPATH MALIGAI,
   COLLEGE ROAD, CHENNAI.
   4 N.AKILAN
   5 T.RAJKUMAR
   6 AR.MOOKKAIAH
   7 S.MANIMUTHU
   8 N.MARUTHAPANDI
   9 V.PREMA
   10 A.VASUKI
   11 R.SURYA
   12 M.MARRIYAPPAH
   13 K.KAMARAJ
   14 A.KUODALINGAM
   15 D.SELVAKUMAR
   16 P.SENTHIL
   17 S.KANIRAJ
   18 S.SUDHA
   19 R.GUNESHWARI
   20 M.SHANTHI
   21 C.ARUNA
   22 C.MUTHAMMAL
   23 N.SORNARAJ
   24 R.GAYATHRI
   25 M.PANDILATHA
   26 M.SHANTHI
   27 R.PRABHAKARAN

   (R4 TO R27 IMPLEADED AS PER COURT
   ORDER DT.10/12/2014 IN MP.5/14 BY TRJ) ... RESPONDENTS
   Petition praying that in the circumstances stated therein and in the affidavit filed therewith the High Court will be pleased to issue a Writ of Certiorarified Mandamus to call for the records relating to the impugned notification dated 21.8.2014 in advertisement no.6/2014 issued by the 3rd respondent and quash the same in so far as the impugned notification of Adhi Dravida Welfare Department vacancies and consequently direct the 3rd respondent to appoint the petitioner as Direct Recruitment Secondary Grade Teacher 2012-2013 .


   ORDER : This petition coming on for orders upon perusing the petition and the affidavit filed in support thereof and upon hearing the arguments of MR.S.RAMAR, Party in person for the petitioner and of MR.V.R.SHANMUGANATHAN, Special Government Pleader on behalf of the Respondents 1 to 3 in both cases and of MR.T.LAJAPATHI ROY, Advocate for R4 to R27, the court made the following order:-

   The learned Special Government Pleader appearing for the official
   respondents states that there are about 14 posts vacant in SC category.As there are no candidate available for the priority category, they have to accommodate the candidates from the other categories and in that exercise, according to the learned Special Government Pleader, the petitioner in this writ petition will be automatically accommodated as he being a physically challenged person. To complete the said exercise, the learned Special Government Pleader requires four weeks time. Accordingly, the respondents are directed to complete the above exercise
   on or before 31.05.2016.

   2.Once the petitioner in W.P.(MD.No.16547 of 2014 is accommodated,
   then it would render the writ petition infructuous which in turn would enable the other selected candidates to fall in their place.

   3.Post the matter on 06.06.2016.
   sd/-
   18/04/2016
   / TRUE COPY /
   Sub-Assistant Registrar (C.S.)
   Madurai Bench of Madras High Court,
   Madurai - 625 023.

   TO
   1 THE SECRETARY, THE STATE OF TAMILNADU SCHOOL EDUCATION & DEPARTMENT,
   ST. FORT GEORGE, CHENNAI-9.
   2 THE DIRECTOR, AADHI DRAVIDAR WELFARE DEPARTMENT,ST. FORT GEORGE,
   CHENNAI-9.
   3 THE CHAIRMAN,TEACHER RECRUITMENT BOARD,4TH FLOOR, EVK SAMPATH MALIGAI,
   COLLEGE ROAD, CHENNAI.
   +1. C.C. to T.LAJAPATHI ROY, Advocate SR.No.21720
   ORDER
   IN
   WP(MD) No.16547 of 2014
   Date :18/04/2016
   AM/NGM.SS/SAR-I/28.04.2016/2P/5C   who get 201 vacancies

   sc only ????

   sc & sca ????   when will rank list publish????

   Delete
 5. bala sir nenga dinamalar mattum patinga

  ReplyDelete
 6. bala sir nenga dinamalar mattum patinga

  ReplyDelete
 7. ஆசிரியர்களை ஒருமையில் அழைக்கும் சபிதா அம்மையார் மாற்றப்பட்ட வேண்டும்.

  ReplyDelete
 8. Enlighten Pg trb English coaching center place Idappadi, Salem DT. Study materials available contact 9688539099

  ReplyDelete
 9. Enlighten Pg trb English coaching center place Idappadi, Salem DT. Study materials available contact 9688539099

  ReplyDelete
 10. முதலமைச்சர் அவர்களுக்கு முதலில் இவர்களை மாற்றுங்கள்.

  ReplyDelete
 11. முதலமைச்சர் அவர்களுக்கு முதலில் இவர்களை மாற்றுங்கள்.

  ReplyDelete
 12. ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய இயலவில்லை.என்று கூறுபவர்கள் வழக்கை முடிவுக்குக் கொண்டுவர என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? மூன்று வருட காலமாக வழக்கை முடிவுக்குக் கண்டுவராமலும் தகுதித் தேர்வு நடத்தாமலும் காலத்தைக் கடத்திவிட்டார்கள்.

  ReplyDelete
 13. ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய இயலவில்லை.என்று கூறுபவர்கள் வழக்கை முடிவுக்குக் கொண்டுவர என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? மூன்று வருட காலமாக வழக்கை முடிவுக்குக் கண்டுவராமலும் தகுதித் தேர்வு நடத்தாமலும் காலத்தைக் கடத்திவிட்டார்கள்.

  ReplyDelete
 14. Dear Admin sir which caste candidates get remaining 30% postings in adi dravida welfare secondary grade teachers appointment by the judgement of court?????

  ReplyDelete
 15. intha Govt nambana innum one year waste panna vandiyathutha...

  ReplyDelete
 16. அனைத்து வினாக்களுக்கும் ஒரே விடை-விரைவில் நடவடிக்கை எடுப்போம்

  ReplyDelete
 17. நம்பிட்டோம்ல

  ReplyDelete
 18. அனைத்து வினாக்களுக்கும் ஒரே விடை-விரைவில் நடவடிக்கை எடுப்போம்

  ReplyDelete
 19. School lab assistant result epa sir ple publish panuka

  ReplyDelete
 20. வாந்தி வருதூ
  த்தூ த்தூ த்தூ

  ReplyDelete
 21. Case erukum pothu thana posting potaga eppa mattum enna kasakutha

  ReplyDelete
 22. Case erukum pothu thana posting potaga eppa mattum enna kasakutha

  ReplyDelete
 23. செயல்படாத செயலர்

  ReplyDelete
 24. செயல்படாத செயலர்

  ReplyDelete
 25. When ? Chennai corporation schools unit transfer.?

  ReplyDelete
 26. காஞ்சீபும் மாவட்டம் பற்றி தவறான புள்ளி விவரம் எங்கள் ஊர் பிள்ளைகள் அனைவரும் தொழில் பயிற்சி செல்வதில்லை மாறாக வேலைக்கு தான் செல்கிறார்கள்

  ReplyDelete
 27. காஞ்சீபும் மாவட்டம் பற்றி தவறான புள்ளி விவரம் எங்கள் ஊர் பிள்ளைகள் அனைவரும் தொழில் பயிற்சி செல்வதில்லை மாறாக வேலைக்கு தான் செல்கிறார்கள்

  ReplyDelete
 28. I got 90 above marks in yet.but no job.plz tell when the yet case over.

  ReplyDelete
 29. I got 90 above marks in yet.but no job.plz tell when the yet case over.

  ReplyDelete
 30. SABITHA MADAM PANNUNA THAPPUKKU THANDAI KIDAIKUMA?????APPAN VEETTU SOTHAVA SCHOOL KU SELAVU PANNA SONANKA.ETHUKU E.P CO SECETION PUNISHMENT KIDAIKANUM

  ReplyDelete
 31. When will you cone the lab assit result.

  ReplyDelete
 32. When will you cone the lab assit result.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி