Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 12, 2016

பள்ளிக்கூட பாடப்புத்தகங்களை இணையதளம் மூலம்பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

2016–17–ம் கல்வியாண்டிற்கான பாடநூல்களை பள்ளிகள்மொத்தமாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து வினியோகிக்கின்றன.

மாணவர்களும் தமக்கு தேவைப்படும் 2016–17–ம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12–ம் வகுப்புவரையிலான பாடநூல்களை www.textbookcorp.inஎன்ற இணையதளம் மூலம் பதிவுசெய்து பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இது தவிர பாடநூல்களை எளிதில் வாங்கிடும் வகையில் மாநிலத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உள்ள 269 இ–சேவை மையங்களிலும் தேவைப்படும் பாடநூல்களுக்கான தொகையை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். மேற்படி பாடநூல்கள் 48 மணி நேரத்துக்குள் அவர்களது இல்லத்திற்கு கூரியர் சேவை மூலம் வந்துசேரும்.இ–சேவை மையங்களின் விலாச விவரங்கள் www.textbookcorp.in என்ற இணையதளத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். இணையத்தளத்தின் மூலமாக பாடநூல் விலை விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.இந்த தகவல் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி