Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 19, 2016

உத்தர பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை

அரசு ஊழியர்கள் பணியின்போது ஜீன்ஸ், டிசர்ட் அணிந்து வருவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு ஜீன்ஸ் மற்றும் டிசர்ட் அணிந்து வரவும், அலுவலகத்தில் புகை பிடிக்கவும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதற்கும் தடைவிதித்து உத்தவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் சவுகான்.

மேலும், ஆட்சியர் அலுவலகம் என்பது சாதாரண இடம் இல்லை; அதற்கென உள்ள விதிமுறைகளை ஊழியர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அலுவலகத்துக்கு வரும்போது கண்ணியமான உடைகளை  அணிந்து வரவேண்டும் என்று கூறியுள்ளார்.ஊழியர்கள் இந்த விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை மூத்த அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதே சமயம் எந்த மாதிரியான உடைகளை அணிய வேண்டும் என அவர் தனது உத்தரவில் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி