sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jun 10, 2016

கல்விக்கடனை வசூலிப்பதில் வங்கிகள் மும்முரம்:'தள்ளுபடி' என்ற வாக்குறுதியை நிறைவேற்றப்போகிறதா அரசு?

மாணவர்களின் கல்விக் கடன் களை தமிழக அரசு தள்ளுபடி செய் யக்கூடும் என்று கருதும் வங்கிகள், அவற்றை மாணவர்களிடம்வசூ லிக்கும் நடவடிக்கையில் தீவிர மாக இறங்கியுள்ளன. வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கும் நடைமுறையை முந் தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2008-ம் ஆண்டில் எளிமைப்படுத்தியது.

வேகமாக முளைத்த தனியார் சுயநிதி பொறி யியல் கல்லூரிகளில் வங்கிக்கடன் உதவியுடன் ஏராளமான மாணவர் கள் சேர்ந்தனர். எம்பிஏ, மருத் துவம் போன்ற படிப்புகளுக்கும் கல்விக்கடன் அதிகம் வழங்கப் பட்டன.தமிழகத்தில் தற்போது 583 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் இருந்து ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் பொறியியல் பட்ட தாரிகள் வெளியே வருகின்றனர். நாட்டிலேயே அதிக அளவில் பொறியியல் பட்டதாரிகள் வேலையின்றி இருக்கும் மாநிலம் தமிழகம்தான் என்று மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஆய்வறிக்கை (2015-16) தெரிவித்தது. இதன்படி, பொறியியல் முடித்தவர்களில் 70 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர். சரியான வேலை இல்லாததால் கல்விக்கடனையும் திருப்பி செலுத்த முடியாத நிலையில் மாணவர்கள் உள்ளனர்.இதை உணர்ந்த அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், மாண வர்களின் கல்விக் கடனை அரசே ஏற்கும் என்று சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தன. வங்கியில் கல்விக் கடன் பெற்று வேலையில்லாமல் இருப்பவர்களின் கடனை அரசே செலுத்தும் என்று அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட் டது. 2-வது முறையாக மீண்டும் ஆட்சி அமைத்துள்ள அதிமுக, மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்யக்கூடும் என்று கருதும் வங்கிகள், மாணவர்களின் வீடு களுக்கே நேரில் சென்று கல்விக் கடனை வசூலிக்கும் பணியில் இறங்கியிருப்பதாக கூறப்படு கிறது.

இதுதொடர்பாக 2012-ல் பொறி யியல் படிப்பை நிறைவு செய்த மாணவர் சதீஷ் கூறியதாவது:என் சொந்த ஊர் தஞ்சாவூர். கணினி அறிவியல் பிரிவில் பொறி யியல் பட்டம் பெற்றுள்ளேன். சென்னையில் சிறு ஐடி நிறுவனத் தில் சொற்ப சம்பளத்துக்கு வேலை பார்த்து வருகிறேன். நான் கல்விக் கடன் வாங்கிய வங்கியில் இருந்து அதிகாரிகள் எங்கள் வீட்டுக்கு வந்திருப்பதாக தாய் கடந்த வாரம் எனக்கு போன் செய்தார்.என்னிடம் போனில் பேசிய வங்கி மேலாளர், ‘‘அரசு தரப்பில் கல்விக் கடனை தள்ளுபடி செய் வதற்கான அறிகுறி எதுவும் இல்லை. அப்படியே நீங்கள் கட்டாமல் வைத்த தொகை தள்ளுபடியானால், உங்கள் மீது வங்கிக்கு நல்ல அபிப்ராயம்இருக்காது. இதனால் எதிர் காலத்தில் வேறு சேவைகளை பெறுவதில் சிக்கல் ஏற்படும். எனவே, கல்விக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்’’ என்றார். கல்விக் கடன் வாங்கியதால் கடன் தகவல் மையத்தின் (சிபில்) ஸ்கோரும் குறைந்துள்ளது. இதனால், பிற வங்கிகளை நாட முடியாத நிலை உருவாகியுள்ளது.இவ்வாறு அந்த மாணவர் கூறினார்.

அதிகாரிகள் விளக்கம்

இதுதொடர்பாக வங்கித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கல்விக் கடனை திரும்ப வசூ லிக்க கடிதம் அனுப்புகிறோம். லோக் அதாலத் மூலம் தீர்வு காண் கிறோம். இதற்கு உடன்படாதவர் களைத்தான் நேரடியாக சந்தித்து பணத்தை திருப்பிக் கட்டுமாறு கூறுகிறோம். இது வழக்கமான நடைமுறைதான். மற்றபடி, தேர்தல் வாக்குறுதி களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அரசு தரப்பில் கல்விக் கடனை ஏற்பதாக அறிவித்து, அதற்கான நிதியை ஒதுக்கினால் மாணவர்களிடம் பணத்தை நாங்கள் திருப்பிக் கேட்கமாட்டோம்’’ என்றனர்.ஆனால், அரசு தரப்பில் வங்கிக் கடனை ஏற்கும்பட்சத்தில், வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்படக்கூடும் என்பதால், முன்கூட்டியே கடனை வசூலிக்க வங்கிகள் மும்முரம் காட்டுவதாக கூறப்படுகிறது.

3 comments :

 1. MPC TRB coaching center ERODE
  Starts new batch for PG TRB (Mathematics only) from June 3rd week onwords
  Place: 5 KM from erode bus stand Thannerpandalpalayam
  Contact: 9842771667, 9042071667
  " Study material available"

  ReplyDelete
 2. Mutual transfer BT SCIENCE VILLUPURAM to THIRUVALLUR contact 8428895158,8015333658.

  ReplyDelete
 3. Mutual transfer BT SCIENCE VILLUPURAM to THIRUVALLUR contact 8428895158,8015333658.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி