Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 24, 2016

மாணவர் சேர்க்கை இல்லையென படிப்புகளை மூடக் கூடாது:கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு உத்தரவு.

மாணவர் சேர்க்கை இல்லையென எந்தவொரு பாடப் பிரிவையும்மூடிவிடக் கூடாது என்று அரசு உதவிபெறும் கலை- அறிவியல் கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.இந்தச் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அரசால் ஒப்பளிக்கப்பட்ட பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தாலோ அல்லது மாணவர் சேர்க்கையே இல்லை என்றாலோ அந்தப் பாடப் பிரிவை கல்லூரிகள் மூடிவிடக் கூடாது.கல்லூரியில் இடம் கிடைக்காமல் தவிக்கும் ஏழை மாணவர்களை அந்தப் பாடப் பிரிவுகளில் சேர்க்க கல்லூரிநிர்வாகம் முயற்சிக்க வேண்டும். அவ்வாறு பாடப் பிரிவை மூடும் நிலை ஏற்பட்டால், அதற்கான உரிய காரணத்தைத் தெரிவிப்பதோடு, அந்த பாடப் பிரிவில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்புக்கு கல்லூரி செயலரும், முதல்வரும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

அத்துடன், கல்லூரி கல்வி இணை இயக்குநரின் ஆய்வுக்குப் பிறகு அரசின் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே அந்தப் பாடப் பிரிவை மூடவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment :

  1. MPC PG TRB Coaching center ERODE (Mathematics Only)
    * New batch starts from 26.06.16
    * Place: Tannerpandalpalayam 5 KM from Erode busstand
    * Contact: 98427-71667.,90420-71667
    * Study material available

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி